ரூ.20,000 × 12 மாதங்கள் = ரூ.2,40,000. அதாவது, ஆண்டுக்கு ரூ.2.40 லட்சம் ஓய்வூதியம் தேவைப்படுகிறது. இப்போது வருவாய் விகிதம் 6 சதவீதம் என்று கொண்டால், ஆண்டுக்கு ரூ.2.40 லட்சம் ஓய்வூதியம் பெற சுமார் ரூ.40 லட்சம் கொண்ட ‘அனுவிட்டி’ நிதி தேவைப்படும். கணக்கீடு: ரூ.40 லட்சம் × 6% = ஆண்டுக்கு ரூ.2.40 லட்சம். இருப்பினும், இது ஒரு எளிமையான உதாரணம் மட்டுமே. நடைமுறையில், வருவாய் விகிதம், ஓய்வூதியத் தேர்வு, வயது மற்றும் தொடர்புடைய விதிமுறைகளுக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையும், தேவைப்படும் நிதிக்கான கணக்கீடும் மாறக்கூடும்.


