
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை இடையே பேருந்துகள் உள்ளிட்ட 8 வாகனங்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் எட்டு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் வேறு சில வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதில் இரண்டு பேருந்துகள் மற்றும் ஆறு மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

