அதுவும், ‘ட்ரம்ப் காட்டிய வீடியோ, பேசியவை உண்மையானதா?’ என்று பார்த்தால், ‘இல்லவே இல்லை’ என்கிறார்கள்.
ட்ரம்பின் வீடியோ காட்சியில் வந்த சமாதி காட்சி, சமாதியே அல்ல. அது 2020-ம் ஆண்டு விவசாயி தம்பதிகள் கொலை நடந்தப்போது, அவர்களின் இறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் அது.
மேலும், ட்ரம்ப் பேசிய வெள்ளை இன படுகொலை, 1,000 வெள்ளை விவசாயிகள் கொலை போன்ற அனைத்து தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகவே இருந்திருக்கிறது. இதை CNN செய்தி நிறுவனத்தின் தென் ஆப்பிரிக்கா பத்திரிகையாளர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், பேராசியர்கள் என பலர் உறுதி செய்கிறார்.
ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் 1,000 விவசாயிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், அது நிச்சயம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போகாது. தென் ஆப்பிரிக்காவில் கொலைகள் நடக்கிறது. ஆனால், அதில் ஆப்பிரிக்கர்கள் விதிவிலக்கு அல்ல என்று ஆதாரத்துடன் பேசுகின்றனர்.
ஆக, ட்ரம்ப் கூறிய தகவல்கள் பொய்யானவை என்று தற்போது சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

