
எஸ். தில்லைநாதன்
தமிழ் தேசிய அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம், பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சில வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து, xக்டோபர் மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (02.11.2026) சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை திடீரென மீண்டும் மிகவும் மோசமடைந்ததையடுத்து, அவர் பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

