• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளி பரிசுகளுக்கு வரி உண்டா…? இது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்!!!

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
தீபாவளி பரிசுகளுக்கு வரி உண்டா…? இது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீபாவளி என்றாலே கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் ஒருவருக்கொருவர் பரிசுகளை பகிர்ந்து கொள்வதுதான். அது பணமாக இருந்தாலும் சரி, நகை அல்லது பிற விலைமதிப்புள்ள பொருட்களை கொடுப்பதும் வாங்குவதுமாக தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். எனினும் தீபாவளி பரிசுகளுக்கு நாம் வரி செலுத்த வேண்டுமா என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கு உள்ளது. தீபாவளி அன்று பெறப்படும் பரிசுகள் வரிகளுக்கு உட்பட்டதா, அப்படி இருந்தால் அது சம்பந்தமான விதிகள் என்ன? இது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விளம்பரம்

இந்தியாவில் நிலவும் கிஃப்ட் டேக்ஸ் இந்தியாவில் கிஃப்ட் டேக்ஸ் ஆக்ட், 1958ன் கீழ் பரிசுகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் 1998ல் அரசு இந்த விதியை தகர்த்தது. எனினும் மீண்டும் வருமான வரிச்சட்டம், 1961ன் கீழ் பரிசுகளுக்கு வரி வாங்குவது சம்பந்தமாக 2004ஆம் ஆண்டு பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி ஒரு தனி நபர் அல்லது கூட்டுக் குடும்பம் பெறக்கூடிய பரிசுகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அது வருமானமாக கருதப்பட்டு அதற்கு வரி வசூலிக்கப்படும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56 (2) (x) பரிசுகளுக்கான வரிகள் பற்றி விவரிக்கிறது. இந்த விதியானது தீபாவளி அன்று பெறப்படும் பரிசுகள் உட்பட அனைத்து வகையான பரிசுகளுக்கும் பொருந்தும். நீங்கள் வாங்கக்கூடிய பரிசுகள், பணம், அசையும் அல்லது அசையா சொத்து மற்றும் பொருளாதார கருவியாக கூட இருக்கலாம். எனினும் இதற்கு ஒரு சில விலக்குகளும், நிபந்தனைகளும் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வது வரியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும்.

விளம்பரம்

என்னென்ன வகையான பரிசுகளுக்கு வரி வசூலிக்கப்படும்?

பிரிவு 56 (2) (x)இன் கீழ் நீங்கள் வாங்கும் பரிசுகளின் மொத்த மதிப்பு ஒரு நிதியாண்டில் 50,000 ரூபாயை கடந்துவிட்டால் அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

பணமாக பெறும் பரிசுகள்: கேஷ், செக் அல்லது பேங்க் டிரான்ஸ்ஃபர்.

அசையும் சொத்து: நகை, பங்குகள், செக்யூரிட்டி, புல்லியன், ஆர்ட் ஒர்க் போன்றவை.

அசையா சொத்து: நிலம், கட்டடங்கள் அல்லது வேறு எந்தவிதமான ரியல் எஸ்டேட்

இதையும் படிக்க:
தினமும் வேலைக்கே போகாமல் மாதந்தோறும் பணம் சம்பாதிக்கலாம்.. ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும்!

விளம்பரம்

கிஃப்ட் டேக்ஸுக்கான விலக்குகள்

உறவினர்கள் வழங்கும் பரிசுகள்:

உறவினரிடமிருந்து பெறப்படும் பரிசின் மதிப்பை கருத்தில் கொள்ளாமல் வரி வசூலிக்கப்படாது.

வருமான வரிச் சட்டத்தின்படி, ‘உறவினர்’ என்பது வாழ்க்கை துணை, உடன் பிறந்தவர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி, மகன் அல்லது மகள், வாழ்க்கைத் துணையுடன் பிறந்தவர்கள் மற்றும் அவருடைய பெற்றோர், மகனின் மனைவி அல்லது மகளின் கணவர் ஆகியோர் ஆவர். ஒருவேளை உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு தீபாவளியன்று ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகையை பரிசாக அளித்தால் அதற்கு நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. ஏனெனில் இது உறவினர்களிடம் இருந்து பெறப்படும் பரிசுகளின் கீழ் வருவதால் இதற்கு வரி கிடையாது.

விளம்பரம்

சிறப்பு நாட்களில் பெறப்படும் பரிசுகள்:

திருமணம் போன்ற சிறப்பு நாட்களில் பெறப்படும் பரிசுகளுக்கும் வரி கிடையாது. எனினும் இது திருமணத்திற்கு மட்டுமே பொருந்துமே தவிர பிறந்தநாள், திருமண நாள் அல்லது தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பொருந்தாது.

மரபு வழி சொத்து:

மரபு வழியாக நீங்கள் பெறும் சொத்து அல்லது பணம் உங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானமாக கருதப்படாது. இது தலைமுறை தலைமுறையாக மாற்றப்பட்டு வரும் பூர்வீக சொத்தின் அடிப்படையில் வரும்.

தொண்டு நிறுவனங்களுக்கு தரும் பரிசுகள்:

ஒருவேளை நீங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பரிசுகளை கொடுத்தால் அதற்கு வரி செலுத்த தேவையில்லை. இதற்கு வருமான வரிச்சட்டத்தில் உள்ள பிரிவு 80Gன் கீழ் டிடக்ஷன்களை பெற்றுக் கொள்ளலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
லட்சக்கணக்கில் சம்பளம்.. ஆனாலும் இந்த வேலையை செய்ய யாரும் விரும்புவதில்லை! – ஏன் தெரியுமா?

தீபாவளி அன்று நிறுவனங்கள் வழங்கும் பரிசுகளுக்கான வரி

  • ஒரு நிறுவனம் அதனுடைய பணியாளர்களுக்கு பணமாக பரிசுகளை கொடுத்தால் அந்த முழு தொகையும் வரிக்கு உட்பட்டதாகும்.

  • பணமில்லாத பரிசுகளின் மொத்த மதிப்பு 5000 ரூபாயை கடந்துவிட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

  • தீபாவளி அன்று தரப்படும் போனஸ் பணியாளரின் சேலரியாக கருதப்பட்டு அதற்கு வரி வசூலிக்கப்படும்.

.

Read More

Previous Post

TOP 10 NEWS: திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் பலி! லாட்டரி அதிபர் வீட்டில் 12 கோடி பறிமுதல்! டாப் 10 நியூஸ்!

Next Post

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது ஆடவருக்கு 15 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Next Post
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது ஆடவருக்கு 15 ஆண்டுகள் சிறை | Makkal Osai

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது ஆடவருக்கு 15 ஆண்டுகள் சிறை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin