• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திலீபன் சிலை பலவந்தமாக அகற்றல் : JVP/NPP அரசின் இரட்டை வேடம் அம்பலம்!

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திலீபன் சிலை பலவந்தமாக அகற்றல் : JVP/NPP அரசின் இரட்டை வேடம் அம்பலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகிம்சை வழியில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல், மக்கள் கண்முன்னே தன் உயிரை பகுதி பகுதியாக தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவுச் சிலையை காவல்துறை இன்று பலவந்தமாக அகற்றியுள்ள சம்பவம் தமிழர் தாயகம் எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



நல்லூரில் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவேந்தல் தொடரில் இந்த ஆண்டு உணர்வுபூர்வமும் மறவா வரலாற்றை மையப்படுத்தி நிறுவப்பட்ட அந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு அரசு காட்டியுள்ள அவசரம், தெற்கில் எழுந்துள்ள இனவாத அலைக்கு அரசே தலையாட்டியுள்ளதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.



இங்குதான் JVP அரசின் பாரிய முரண்பாடு அம்பலமாகிறது. தங்களது ஆயுதப் போராட்டத்தில் உயிர் நீத்த தோழர்களையும், தலைவர் ரோகண விஜேவீர உள்ளிட்டவர்களையும் வருடா வருடம் நினைவு கூர்ந்து, அவர்களது நினைவிடங்களை புனிதமாக பாதுகாக்கும் JVP, அதே நேரத்தில் ஒரு துப்பாக்கி கூட தூக்காமல், அகிம்சை வழி உண்ணாவிரத போராட்டத்தில் உயிர் நீத்த ஒருவரின் சிலையை அகற்றி எறிகிறது. இது என்ன நீதி?


அண்மையில் அமைச்சர் சந்திரசேகர் திலீபனின் நினைவாலயத்துக்கு சென்ற போது எதிர்ப்புக்கள் வெளிப்பட்டாலும், தாம் மனிதத்துடம் அவ்விடம் வந்ததாக கூறினார். இன்று நடந்ததற்கான அவரது மனிதம் நிறைந்த எதிர்வினை எவ்வாறு இருக்கப்போகிறது.

இன்று அவர் அங்கம் வகிக்கும் அரசின் காவல்துறை அல்லவா அந்த சிலையை அகற்றி சென்றுள்ளனர். இதை விடப் பெரிய அரசியல் நாடகம் வேறு இருக்க முடியாது.



வடகிழக்கு எங்கும் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இராணுவத்தின் வெற்றிச் சின்னங்களையும், புத்தர் சிலைகளையும் தமிழர் பகுதியில் திணிக்கும் அரசு, தமிழ் மக்கள் யாரை தங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க நினைக்கிறது. சிலையை அகற்றினால் நினைவு அகழாதல்லவா.. இதுதான் NPP உரைக்கும் நல்லிணக்கமா….

கடந்த 17 வருடமாக வன்முறையின் பக்கம் திரும்பி கூட பார்க்காமல், ஜனநாயக ரீதியாக, அரசியல் ரீதியாக மட்டுமே போராடி வரும் தமிழ் மக்களுக்கு, தங்களுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் பூரண உரிமை உண்டு. அதை தடுப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம்.


12 நாட்கள் தன் உயிரை மக்கள் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக வழங்கிய ஒருவரின் நினைவை, சிலையை அகற்றுவதன் மூலம் மக்கள் மனதில் இருந்து அகற்றி விடலாம் என்று இந்த அரசு நினைத்தால் அது பகல் கனவு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஒடிசாவில் கனமழை; 75 ஆயிரம் பேர் பாதிப்பு …

Next Post

சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம் – Sri Lanka Tamil News

Next Post
சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம் – Sri Lanka Tamil News

சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin