• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
சமூகம்
/
சிறுநீரக வைத்தியசாலை சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு; சுயாதீன விசாரணைக்காக ஐவர் கொண்ட குழு நியமனம்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட வெடிப்பில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் பிரதான சமையலறைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ஹபரணை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வைத்தியசாலை ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

சமையலறைக்கான எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை 04 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த 07 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவரது நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சிறுநீரக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் பலரும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலையின் பிரதான சமையலறை மற்றும் அதனைச் சூழவுள்ள பல கட்டடத் தொகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழு தனது விசாரணைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சுகாதார அமைச்சு மட்டத்திலான விசேட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இதற்கு மேலதிகமாக, இரண்டு விசேட பொலிஸ் குழுக்களும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தடயவியல் மற்றும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

Read More

Previous Post

திலீபன் சிலை பலவந்தமாக அகற்றல் : JVP/NPP அரசின் இரட்டை வேடம் அம்பலம்!

Next Post

காலி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு – Sri Lanka Tamil News

Next Post
காலி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு – Sri Lanka Tamil News

காலி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin