• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா? | Dhanush Net Worth: How the Actor Built a Rs 230 Crore Fortune With a Rs 150 Crore Chennai Mansion, Luxury Cars and Business Moves

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா? | Dhanush Net Worth: How the Actor Built a Rs 230 Crore Fortune With a Rs 150 Crore Chennai Mansion, Luxury Cars and Business Moves
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?

சினிமா குடும்ப பின்னணியில் இருந்து திரையுலகில் கால் பதித்தாலும் சுய உழைப்பின் மூலம் தன்னை செதுக்கி கொண்டு பன்முகம் கொண்டவராக உயர்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் நடிக்கும் படம் என்றாலே சிறந்த கதை இருக்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் வரை கொண்டு சேர்த்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ், இந்தி, ஹாலிவுட் என தனது திறமையால் பல உயரங்களை எட்டி நாடே கவனிக்கும் நடிகராக உயர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமானார் தனுஷ். ஒல்லியான உடல்வாகு கொண்ட இந்த பையனா நடிகனா என பலரும் கேலி செய்த நிலையில் காதல் கொண்டேன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிமாறனுடன் தனுஷ் கூட்டணி அமைத்து நடித்த படங்கள் அனைத்துமே செம் ஹிட்.

திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், பாடல் ஆசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்து அனைத்திலுமே வெற்றி பெற்றுள்ளார் தனுஷ். திரைத்துறை மற்றும் வணிக முதலீடுகள் மூலம் தனுஷ் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பு கொண்டவராக உருவெடுத்துள்ளார்.

தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க 20 முதல் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையின் மிக முக்கிய விஐபி பகுதியான போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார். இங்கே தான் ரஜினிகாந்த், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் வீடு இருக்கிறது.

போயஸ் கார்டன் மட்டுமின்றி, ஆழ்வார்பேட்டையிலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. மேலும், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களிலும் சொத்து முதலீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷிடம் Rolls-Royce Ghost கார் உள்ளது. இதன் விலை சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும். Jaguar XE, Mercedes-Benz S-Class, Range Rover Sport HSE, Ford Mustang ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார். தனுஷ் சொந்தமாக வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார். இதன் மூலமும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.

அதுமட்டுமில்லாமல் Dhanush Global Ventures Private Limited என்ற பெயரில் ஒரு முதலீட்டு நிறுவனமும் அவர் நடத்தி வருகிறார். Tracxn Network என்ற சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ‘Dhanush Global Ventures’ நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கார்ப்பரேட் தொடர்புகள், கூட்டு முதலீடுகளை மேற்கொள்கிறது. இதில் ரியல் எஸ்டேட் முக்கிய தொழிலாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் முக்கிய பெருநகர மையங்களில் உள்ள உயர்தர குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் சொத்துக்களை கையகப்படுத்தி பராமரிப்பது போன்ற செயல்களில் இந்நிறுவனம் முதலீடு செய்வதாக சொல்லப்படுகிறது.

தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் திரை உலகிலும் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் அவற்றை எல்லாம் சாமர்த்தியமாக கையாண்டு தன்னுடைய தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறி பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் தனுஷ்.

Share This Article

English summary

Dhanush Net Worth: How the Actor Built a Rs 230 Crore Fortune With a Rs 150 Crore Chennai Mansion, Luxury Cars and Business Moves

திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா? – Dhanush, one of South India’s most bankable stars, is reportedly worth around Rs 230 crore, with a lavish Rs 150 crore Chennai mansion, premium cars, and income from films and production strengthening his wealth story.

Story first published: Tuesday, July 28, 2026, 13:34 [IST]

Other articles published on Jul 28, 2026

Read More

Previous Post

லடாக் உறைந்தாலும்! சோனம் வாங்சுக்கின் மண் வீட்டில் குளிராதாம்! செம டெக்னிக்! ஊட்டியில் டிரை பண்ணலாமே | Do you the traditional house of Sonam Wangchuk in Ladakh?

Next Post

ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதில்: “புதினிடம் நேரடியாகக் கேட்பேன்” | “I’ll Ask Putin”: Trump’s Reply to Zelenskyy’s Russia-Iran Claim

Next Post
ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதில்: “புதினிடம் நேரடியாகக் கேட்பேன்” | “I’ll Ask Putin”: Trump’s Reply to Zelenskyy’s Russia-Iran Claim

ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பதில்: "புதினிடம் நேரடியாகக் கேட்பேன்" | "I'll Ask Putin": Trump's Reply to Zelenskyy's Russia-Iran Claim

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin