இலை வாழை சாகுபடிக்கு பூவன் ரகம் ஏற்றதாக உள்ளது. இதேபோல் கற்பூரவல்லி, மொந்தன் ஆகிய ரகங்களையும் பயிரிடலாம். சாகுபடி நிலத்தைச் சுற்றிலும் அகத்தி, கிளைரிசிடியா போன்ற மரங்களை வரப்பின் உட்புறத்திலும், சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்களை வெளிப்புறத்திலும் நடவு செய்ய வேண்டும். இவை காற்றின் வேகத்தைக் குறைத்து, வாழை இலைகள் கிழிந்து சேதமடைவதைத் தடுக்க உதவும். வாழைக் கன்றுகளை 4.5 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 2,150 கிழங்குகள் தேவைப்படும்.

