• Login
Tuesday, May 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணத்தை மீறிய உறவு.. மது குடித்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்.. வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் கொடூர முகம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 26, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருமணத்தை மீறிய உறவு.. மது குடித்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்.. வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் கொடூர முகம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2026 2:50 PM IST

தெலங்கானா நாராயணகேட்டில், கள்ளத்தொடர்பில் இருந்த கல்பனா காதலன் சிண்டூவுடன் சேர்ந்து கணவன் முத்தியத்தை கொலை செய்து நிலத்தில் புதைத்தது, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கணவனை  கொன்ற மனைவி
கணவனை கொன்ற மனைவி

தெலங்கானாவில் திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்து குழி தோண்டி மனைவி புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் நாராயணகேட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தியம் – கல்பனா தம்பதி.  இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.  தனக்கு சொந்தமான நிலத்தில் முத்தியம் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் நாராயணகேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்பனா செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கல்பனாவிற்கு அதே மருத்துவமனையில் பணியில் இருந்த மனூரு மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டூ என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறி உள்ளது. மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு நாளும் காதலனுடன் நேரத்தைச் செலவழித்துவிட்டு கல்பனா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய டிரைவர்… விசாரிக்காத போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டில் இருந்தாலும் அடிக்கடி போனிலேயே நேரத்தைச் செலவழித்து இருக்கிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் முத்தியம், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார். தங்கள் உறவுக்கு கணவன் முத்தியம் தடையாக இருப்பதாக நினைத்த கல்பனா, காதலன் சிண்டூவுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.  கொலை திட்டத்தின்படி கடந்த 16ஆம் தேதி இரவு, கணவனுக்கு அதிக அளவில் கல்பனா மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து இருக்கிறார்.

அதன்படி போதையில் முத்தியம் தூங்கிய பிறகு, காதலன் சிண்டூவை வீட்டிற்கு வரவழைத்து இருக்கிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து முத்தியம் ரெட்டியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கிராமத்தின் எல்லையில் உள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு உடலை எடுத்துச் சென்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைத்து விட்டனர்.

மேலும் அந்த இடத்தில் கற்களைப் போட்டு குழி தோண்டப்பட்ட அடையாளம் தெரியாமல் செய்து விட்டனர். இரு நாட்கள் கடந்த நிலையில் கணவன் காணாமல் போய்விட்டதாக முத்தியம் ரெட்டியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் கல்பனா தெரிவித்து இருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கல்பனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்தனர். அப்போது அவர் அடிக்கடி தனது காதலன் சிண்டூவிற்கு போன் செய்வது தெரிந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தியம் ரெட்டியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் அங்கேயே உடற்கூறு ஆய்வு நடத்தி, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். கல்பனா, சிண்டூ ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருமணத்தை மீறிய உறவு.. மது குடித்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்.. வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் கொடூர முகம்!

Read More

Previous Post

எரிபொருள் விலை தொடர்பான கூற்றுகளுக்கு முற்று! வெளியாகியுள்ள அறிவிப்பு

Next Post

ஐபிஎல் 2026 சிறந்த அணி: கோலிக்கு இடமில்லை! 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்த பத்ரிநாத்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
ஐபிஎல் 2026 சிறந்த அணி: கோலிக்கு இடமில்லை! 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்த பத்ரிநாத்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

ஐபிஎல் 2026 சிறந்த அணி: கோலிக்கு இடமில்லை! 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்த பத்ரிநாத்! | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin