திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?!
தமிழ்நாடு கிளீன் எனர்ஜி துறையில் புதிய பரிமானமாக விக்ரம் சோலார் (Vikram Solar) திருநெல்வேலியில் மாபெரும் முதலீட்டை அறிவித்துள்ளது. இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசும், விக்ரம் சோலார் நிறுவனமும் கையெழுத்திட்டது.
இந்த புது தொழிற்சாலைக்காக விக்ரம் சோலார் சுமார் 15,037 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது, இதன் மூலம் 2670 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. விக்ரம் சோலார் நிறுவனத்தின் இப்புதிய BESS தொழிற்சாலை மூலம் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை கிளீன் எனர்ஜி உற்பத்தியிலும், சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கும், பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை, ஏற்கனவே மிகப்பெரிய உற்பத்தி ஆலைகளை தமிழ்நாட்டில் 2 இடத்தில் வைத்துள்ளது. சென்னையில் ஒரகடம் மற்றும் தஞ்தாவூரில் வல்லம் பகுதியிலும் சோலார் மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டாயிக் மாடியூல்களை தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்துள்ளது. இதன் நீட்ச்சியாகவே தற்போது திருநெல்வேலியில் கங்கைகொண்டா பகுதியில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் தொழிற்சாலை அமைக்கிறது.
தமிழ்நாட்டின் புதுப்பிக்கதக்க சக்தி, பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ், எதிர்காலத்திற்கான மேம்பட்ட உற்பத்தி இலக்குகளை அடைய இந்த கிளீன் எனர்ஜி துறை பெரிய அளவில் பயன்பெறும். இதோடு கங்கைகொண்டான் சிப்காட் பகுதிக்கு இது புது மகுடமாக இருக்கும்.
விக்ரம் சோலார் தமிழ்நாட்டு உடனான ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், இப்புதிய BESS தொழிற்சாலை சுமார் 6 லட்சம் சதுரடியில் அமைய உள்ளது, மேலும் இத்தொழிற்சாலை அதிகளவிலான ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்திஸ் இயங்க கூடியதாக இகுக்கும் என அறிவித்துள்ளது. இத்தொழிற்சாலையில் தனது தயாரிப்பின் தரத்தை உயர்த்த டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது விக்ரம் சோலார்.
இதுமட்டும் அல்லாமல் இப்புதிய தொழிற்சாலையில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்திற்கு தேவையான மாடியூல், செல், தண்ணீர், இன்காட் உற்பத்திக்கான தளமும் அமைக்கப்பட உள்ளது. 2027ஆம் நிதியாண்டுக்குள் 9 ஜிகாவாட் சோலார் செல் உற்பத்தி தளத்தையும், 2028ஆம் நிதியாண்டில் கூடுதலாக 3 ஜிகாவாட் சேர்க்கவும் திட்டமிட்டு உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் விக்ரம் சோலார் 5.22 சதவீத உயர்வுடன் 193.40 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.

