• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடும்ப சொத்து, அரசு வேலைக்காக பெற்ற தாய்க்கே ஸ்கெட்ச்.. கூலிப்படையுடன் மகள் செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
குடும்ப சொத்து, அரசு வேலைக்காக பெற்ற தாய்க்கே ஸ்கெட்ச்.. கூலிப்படையுடன் மகள் செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 8:50 PM IST

தீவிர விசாரணையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் சதி வேலை போலீசாருக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.

நீரஜ் சர்மா - ஆயுஷி
நீரஜ் சர்மா – ஆயுஷி

குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக தாயை கூலிப்படை வைத்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் சர்மா. இவரது கணவர் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கணவர் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த கிளார்க் வேலை கருணை அடிப்படையில் மனைவியான நீரஜ் சர்மாவிற்கு கிடைத்தது. இந்த நிலையில் தான், ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மற்றொரு விபத்தில் நீரஜ் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம், ஆரம்பத்தில் ஒரு சாதாரண விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து கணவன் மனைவி இருவரும் எப்படி ஒரு மாதிரி விபத்தில் உயிரிழந்தனர்? என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதில் ஏதேனும் சதிச்செயல் இருக்குமா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். அதன்படி விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில் விபத்தை ஏற்படுத்திய கார் சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் வந்து மோதியதை கண்டுபிடித்தனர். கார் மோதிய வேகத்தில், நீரஜின் உடல் தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த ஸ்கார்பியோ காரை போலீசார் தற்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் காரின் டயர் பிரேக் அடித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இது போலீசாரின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

இது தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இது போலீஸாருக்கு உதவியது. தீவிர விசாரணையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் சதி வேலை போலீசாருக்கு தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரத்தில் ஆயுஷி சட்டக்கல்லூரி மாணவி சர்மா மற்றும் அவரது பெரியப்பா மோகன் ஸ்வரூப் உட்பட 7 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இதனால், மகள் ஆயுஷியின் ஆத்திரம் அதிகரித்திருக்கிறது. அது மட்டுமின்றி தாய்க்கும், மகளுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சொத்துத் தகராறும் நீடித்து வந்துள்ளது. இந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாக வேண்டும் என்றால் தாயை தீர்த்துக் கட்டுவது தான் ஒரே வழி என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் ஆயுஷி. தாய் இறந்து விட்டால் அரசு வேலையும் தனக்கு கிடைத்து விடும், தனக்கு கிடைக்க வேண்டிய குடும்ப சொத்துக்களும் எந்த பிரச்சினையும் இன்றி தனக்கு வந்து விடும் என நம்பியிருக்கிறார் ஆயுஷி.

இந்த கொலையை அரங்கேற்ற தனது பெரியப்பா மோகன் ஸ்வரூப்பின் உதவியை நாடியிருக்கிறார். மோகன் ஸ்வரூப்பிற்கு ஏற்கனவே நீரஜ் சர்மாவுடன் சொத்துத் தகராறு இருப்பதால், இந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் கூட்டணி போட்டு கொலை திட்டத்தை தீட்டியுள்ளனர். இந்த கொலைக்காக உறவினர் பால்ராமுடன் சேர்ந்து, பாரத்பூரைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் ஹேமந்த் சர்மாவிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்து நீரஜைக் கொல்ல ஒப்பந்தம் செய்தனர்.

அதன்பிறகு கூலிப்படையினர் தொடர்ந்து ஒரு மாதமாக நீரஜின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தனர். அவர் வழக்கமாக செல்லும் பாதைகளை துல்லியமாக நோட்டம் விட்ட அவர்கள் காரை ஏற்றி கொள்வது என்கிற முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி ஸ்கார்பியோ கார் ஒன்றை ஏற்பாடு செய்த அந்த கும்பல், அதில் அதிவேமாக சென்று நீரஜ் மீது மோதி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையை விபத்து போல் சித்தரிக்க முயன்ற போதும், போலீசாரின் சந்தேக வலையில் சிக்கிய கொலைக் கும்பல் கூண்டோடு சிக்கி விட்டது. பெற்ற மகளே தாயை கூலிப்படை அமைத்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

குடும்ப சொத்து, அரசு வேலைக்காக பெற்ற தாய்க்கே ஸ்கெட்ச்.. கூலிப்படையுடன் மகள் செய்த கொடூரம்.. என்ன நடந்தது?

Read More

Previous Post

தன்னை கைது செய்யவேண்டாமென்ற கோட்டா : நீதிமன்றின் உத்தரவு

Next Post

திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?! | Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!

Next Post
திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?! | Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!

திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?! | Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin