• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!! | Trichy’s Thiruverumbur Likely to Become Defence and Aerospace Production Hub

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!! | Trichy’s Thiruverumbur Likely to Become Defence and Aerospace Production Hub
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!!

தமிழ்நாட்டின் மையத்தில் இருக்கும் திருச்சி நகரம் விரைவில் புதிய அடையாளத்தை பெற உள்ளது. திருச்சியில் அமைக்கப்பட இருக்கும் புதிய சிப்காட்டை நாட்டின் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதி சிப்காட் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைக்கான உற்பத்தி மையமாக உருவெடுக்க போகிறது. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிபிஐஐடி (DPIIT) அமைப்பின் Bhavya – Bharat Audyogik Vikas Yojna திட்டத்தின் கீழ், திருவெறும்பூர் சிப்காட் தொழிற்பூங்காவை பாதுகாப்பு உபகரண உற்பத்தி மையமாக உருவாக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!!

நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய நகரங்களில் Plug and Play வசதி கொண்ட பாதுகாப்பு உற்பத்தி தொழிற்பூங்காக்களை உருவாக்குவதே Bharat Audyogik Vikas Yojna திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதில் ஒரு நகரமாக திருச்சியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் முக்கிய முனையங்களில் ஒன்றாக திருச்சி திகழ்கிறது. இந்நிலையில், திருச்சியின் தொழில் சூழலை மேம்படுத்தவும், பன்முகப்படுத்தவும் திருவெறும்பூர் சிப்காட் பகுதியை பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைக்காக பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பாக ஆலோசனைகள் மற்றும் களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள Vimaan – Valavanthankottai Industrial Manufacturer Association & Network அமைப்பின் தலைவர் ராம்பிரகாஷ், தற்போது போர்ச்சூழல்கள் மாறிவிட்டன. அமெரிக்கா-ஈரான் போர் போன்ற சம்பவங்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளன. எனவே, விண்வெளி துறைக்கு இத்தகைய நவீன ஆயுதங்களை உற்பத்தி ஒரு நகரமாக திருச்சி திருவெறும்பூர் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப்பட்டி மற்றும் சூரியூர் கிராமங்களில் உள்ள 148.9 ஏக்கர் சிப்காட் நிலங்கள் மட்டுமின்றி, திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையை ஒட்டியுள்ள அரசு நிலங்களையும் இந்த திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருவெறும்பூரில் , Deep-tech ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்து, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன ட்ரோன்கள் மற்றும் யுஏவிகளை தயாரிக்க திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

திருவெறும்பூர் பகுதியில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் பாதுகாப்பு உபகரண உற்பத்தி திறனை மேம்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த உடன் எந்தெந்த நிறுவனங்கள் இங்கே ஆலை அமைக்க போகின்றன என்னென்ன உற்பத்தி செய்யப்பட உள்ளன என்ற தகவல்கள் வெளிவரும்.

திருச்சி மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு இது நல்ல செய்தி. ஏனெனில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இது ஒட்டுமொத்தமாகவே திருச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

Share This Article

English summary

Trichy’s Thiruverumbur Likely to Become Defence and Aerospace Production Hub

திருச்சிக்கு ஜாக்பாட்..!! மாஸ் பிளான் போடும் மத்திய அரசு.. அடையாளமே மாற போகுது..!!- Trichy’s Thiruverumbur industrial park is likely to be selected under the Centre’s Bhavya scheme, paving the way for a defence and aerospace production hub in Tamil Nadu.

Story first published: Monday, August 3, 2026, 9:12 [IST]

Other articles published on Aug 3, 2026

Read More

Previous Post

‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு அழைப்பு விடுத்த விந்து தாரா சிங்! | Vindu Dara Singh Invites Delhi CM Rekha Gupta to Film Expo India 2026 Inauguration

Next Post

தெருநாய்களுக்கு எதிரான நடவடிக்கை SOPs இணங்கவே மேற்கொள்ளப்பட்டது; கிள்ளான் மேயர் | Makkal Osai

Next Post
தெருநாய்களுக்கு எதிரான நடவடிக்கை SOPs இணங்கவே மேற்கொள்ளப்பட்டது; கிள்ளான் மேயர் | Makkal Osai

தெருநாய்களுக்கு எதிரான நடவடிக்கை SOPs இணங்கவே மேற்கொள்ளப்பட்டது; கிள்ளான் மேயர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin