• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தூத்துக்குடி நீதிமன்றம்! | Thoothukudi Court Denies Bail to DMK MLA Markandeyan Over Remarks Against CM Vijay

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தூத்துக்குடி நீதிமன்றம்! | Thoothukudi Court Denies Bail to DMK MLA Markandeyan Over Remarks Against CM Vijay
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Published: Thursday, July 30, 2026, 23:15 [IST]

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், கடந்த 18 ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thoothukudi Court Denies Bail to DMK MLA Markandeyan Over Remarks Against CM Vijay

இதையடுத்து, முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 22 ஆம் தேதி மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் தரப்பு மனு அளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு 10 நாட்களாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சுபா தேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதுசம்பந்தமான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்தார். இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை இன்று மாலைக்கு ஒத்திவைத்திருந்தார்.

இதையடுத்து, மீண்டும் இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

English summary

Thoothukudi District Principal Court has dismissed the bail plea of Vilathikulam ​​DMK MLA Markandeyan, who was arrested and imprisoned for making threatening remarks against Tamil Nadu CM Vijay.

Read More

Previous Post

பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து தப்பிய ஹரக் கட்டா!

Next Post

26 வருடத்தில் 2வது முறை.. தங்க நகைகளுக்கு இப்படியொரு நிலைமையா? உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்! | India Gold Jewellery Demand Crashes 15% – Second Worst Quarter in 26 Years: World Gold Council

Next Post
26 வருடத்தில் 2வது முறை.. தங்க நகைகளுக்கு இப்படியொரு நிலைமையா? உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்! | India Gold Jewellery Demand Crashes 15% – Second Worst Quarter in 26 Years: World Gold Council

26 வருடத்தில் 2வது முறை.. தங்க நகைகளுக்கு இப்படியொரு நிலைமையா? உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்! | India Gold Jewellery Demand Crashes 15% – Second Worst Quarter in 26 Years: World Gold Council

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin