• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தினமும் ஒரு ரொட்டி சாப்பிட்டு உயிர் வாழ்ந்த நபர், இன்று பல கோடி மதிப்புள்ள பேக்கரியின் அதிபர்; யார் அவர்?

GenevaTimes by GenevaTimes
July 10, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தினமும் ஒரு ரொட்டி சாப்பிட்டு உயிர் வாழ்ந்த நபர், இன்று பல கோடி மதிப்புள்ள பேக்கரியின் அதிபர்; யார் அவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 10, 2025 4:46 PM IST

விகேஷ் ஷாவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, அவரது தந்தை பங்குச் சந்தையில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதனால் அவரது குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.

News18News18
News18

இந்தியாவில் பிறந்த எத்தனையோ நபர்கள், தங்கள் வறுமை நிலையை நினைத்து கவலைப்படாமல், கடுமையான உழைப்பாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும், தொழில் திறமையினாலும் தொழிலதிபர்களாக வலம் வருகிறார்கள். இதற்கு நிறைய பேரை உதாரணமாக காண்பிக்கலாம். அப்படி ஒருவரைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

99 பேன்கேக்ஸ் (99 Pancakes) நிறுவனர் விகேஷ் ஷாவின் பயணம், கட்டுக்கடங்காத ஆர்வம் மற்றும் விடாமுயற்சிக்கு சிறந்த சான்றாகும். தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கினார் விகேஷ் ஷா. மனஉறுதி, எதற்கும் கலங்காத கடின உழைப்பு இதுதான் அவரது ஒரே நம்பிக்கையாக இருந்தது. உணவுத் துறையில் பல்வேறு வணிக முயற்சிகளை மேற்கொள்ள அவரை இதுவே வழிநடத்தியது என்றுகூட சொல்லலாம்.

யார் இந்த விகேஷ் ஷா?

விகேஷ் ஷாவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, அவரது தந்தை பங்குச் சந்தையில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதனால் அவரது குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதன் காரணமாக அப்போது 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த விகேஷ், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பகுதிநேர வேலை செய்யத் தொடங்கினார்.

ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து, தினமும் ரூ.700 சம்பாதித்தார். காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் பேக்கரி கடையில் தொடர்ந்து பணியாற்றினார். தன்னுடைய கடுமையான உழைப்பால் 18 வயதிலேயே, அந்தப் பேக்கரி கடையில் மேலாளர் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.

இதையும் படிங்க: உணவு விநியோகப் பிரிவுக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்த சொமேட்டோ… யார் தெரியுமா…?

1998-ம் ஆண்டில், நவபாரத் டைம்ஸ் அறிக்கையின்படி, பேக்கரி வேலையை விட்டு நின்றார் விகேஷ் ஷா. அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம், மலிவான பன்களை சாப்பிட்டு உயிர் பிழைத்தார். பின்னர் 1999-ம் ஆண்டில், ஒரு நண்பரின் உதவியுடன் ‘பேக் பாயிண்ட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். B2B மாதிரியில் உருவாக்கப்பட்ட ‘பேக் பாயிண்ட்’, மும்பையில் உள்ள கேட்டரிங் நிறுவனங்களுக்கு இனிப்பு வகைகள் மற்றும் பேஸ்ட்ரிகளை வழங்கி வந்தது. 2009-ம் ஆண்டில், ‘ஹேப்பினஸ் டெய்லி’ என்ற கேக் கடையைத் திறந்து விகேஷ் மற்றொரு மைல் கல்லைப் படைத்தார்.

99 பேன்கேக்ஸ்

ஜூன் 2017-ம் ஆண்டு, விகேஷ் ரூ.9 லட்சம் முதலீட்டில் ’99 பேன்கேக்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தக் கடையை தொடங்குவதற்கு பின்னால் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றுள்ளது. அதாவது ஒருமுறை விகேஷ் ஷா ஆம்ஸ்டர்டாமிற்குச் சென்றபோது, அங்கு சாலையோர விற்பனையாளர் ஒருவர் பேன்கேக் தயாரிப்பதைப் பார்த்தபோது நாமும் இதேபோல் தொடங்கலாம் என்று யோசனை பிறந்துள்ளது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 10, 2025 4:46 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

தினமும் ஒரு ரொட்டி சாப்பிட்டு உயிர் வாழ்ந்த நபர், இன்று பல கோடி மதிப்புள்ள பேக்கரியின் அதிபர்; யார் அவர்?

Read More

Previous Post

மாடர்ன் உடை அணிந்த இளம்பெண்களை குறிவைத்து ரகசிய வீடியோ.. இன்ஸ்டா இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!

Next Post

தைப்பிங்கில் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய் போலீஸ் புகார் அளித்ததை ஒப்புக்கொண்ட சிறை அதிகாரி | Makkal Osai

Next Post
தைப்பிங்கில் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய் போலீஸ் புகார் அளித்ததை ஒப்புக்கொண்ட சிறை அதிகாரி | Makkal Osai

தைப்பிங்கில் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பில் பொய் போலீஸ் புகார் அளித்ததை ஒப்புக்கொண்ட சிறை அதிகாரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin