2026 – 27ம் ஆண்டிற்கான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாக்கியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்தடைந்துடன் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வருகை செய்துள்ளனர்
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதி
தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி.

மற்றும் அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், தவெகவின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

