தமிழர்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமில்லாமல், பண்பாட்டின் அடையாளமாகவும், சமூக அந்தஸ்தின் குறியீடாகவும் விளங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக எந்த நெருக்கடியிலும் கை கொடுக்கும் ஆகச்சிறந்த முதலீடாகவும் உள்ளது. உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, உலக அளவில் அதிக தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 700 முதல் 800 டன் தங்கம் இந்தியாவில் நுகரப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இவ்வளவு விலை கொடுத்து, பார்த்துப் பார்த்து வாங்கும் தங்க நகைகளை முறையாகப் பராமரித்து பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.


