Last Updated:
Tea Quality Test: சுற்றுலாப் பயணிகள் தேயிலைத் தூள் வாங்கும் போதே கலப்படத் தேயிலையா எனக் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்தியத் தேயிலை வாரியம் மூலம் தென்னிந்தியாவின் தரமான தேயிலைத் தூள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 15 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தென்னிந்தியத் தேயிலை வாரியத்தின் மூலம் தென்னிந்தியத் தேயிலைகளை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுற்றுலா தளங்கள் மற்றும் சிறிய டீ கடைகளில் 20% கலப்படத் தேயிலைத் தூள் உள்ளதாகவும், அவற்றைச் சுற்றுலாப் பயணிகள் தேயிலைத் தூள் வாங்கும் போதே கலப்படத் தேயிலையா எனக் கண்டறிய கண்ணாடி டம்ளர் அனைத்துத் தேயிலை கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chemical Free Banana: காற்று கூட நுழையாத அறையில் நெருப்பு… வாழைப்பழத்திற்கு சுவை கூட்டும் பாரம்பரியப் பாணி…
அவ்வாறு வைக்கப்பட்டுள்ள டம்ளர் மூலமாகத் தேயிலைத் தூளில் கலப்படம் தெரிய வந்தால் குன்னூர் தேயிலை வாரியம், உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறைக்குத் தெரிவிக்கலாம். இதுபோன்ற கடைகள் விரைவில் சீல் வைக்கப்படும் எனத் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் IAS தெரிவித்தார்.
சுத்தமான தேயிலைத் தூள் விற்பனை செய்யப்பட்டால் தேயிலை விலை உயரும் மற்றும் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
The Nilgiris,Tamil Nadu
March 31, 2025 3:20 PM IST
Tea Quality Test: தரமான தேயிலையைக் கண்டுபிடிக்க ஈசி டெஸ்ட்… நீலகிரியில் டூரிஸ்ட்களுக்கு விழிப்புணர்வு…

