Last Updated:
தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நவநீதம் பிள்ளை சர்வதேச சட்டத்துறையிலும், மனித உரிமைகள் பாதுகாப்பிலும் உலகளவில் புகழ்பெற்றவர். தென்னாப்பிரிக்காவில் நீதிபதியாக இருந்தவர்.
நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்க தமிழர். ஆம், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் தான் நவநீதம் பிள்ளை. இவரது முன்னோர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள். 1941 செப்டம்பர் 23 அன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்த நவநீதம் பிள்ளை அந்நாட்டின் நடால் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் சட்ட முனைவர் பட்டம் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.
தென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் சட்ட அலுவலகத்தைத் தொடங்கிய முதல் வெள்ளை இனத்தவரல்லாத பெண் வழக்கறிஞரும்கூட. வழக்கறிஞராக இருந்த காலங்களில் நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய அரசியல் கைதிகளுக்காகவும், நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு கைதிகளின் உரிமைகளுக்காகவும் நீதிமன்றங்களில் வாதாடி வெற்றிபெற்றிருக்கிறார். அதன்பின் நீதிபதியாக பணியாற்றினார்.
2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பணியாற்றி உலகெங்கிலும் நடந்த போர்ச் சூழல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகத் தீவிரமாகச் செயல்பட்டார். நவநீதம் பிள்ளை, தனது வாழ்நாள் முழுவதும் இனவெறி, பாலினப் பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் கொடுத்த முதன்மை ஆளுமையாகத் திகழ்கிறார். இந்த நிலையில் அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்காக நவநீதம் பிள்ளைக்கு தற்போது அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.


