• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தமிழ்நாடு முதலமைச்சருடன் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் ஆலோசனை” – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“தமிழ்நாடு முதலமைச்சருடன் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் ஆலோசனை” – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 13, 2026 8:42 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசித்தார்.

News18
News18

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையிலிருந்து விஜயவாடாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் தரிசனம் செய்தவர், மாலை 5.45 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் சென்று அங்கு அவரைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரை வழங்குமாறு வலியுறுத்தியதாகவும், கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து 7 மணியளவில் புன்னமி காட் பகுதியில் நடைபெறும் விஜயவாடா உத்சவ் 2.0-வில் பங்கேற்க ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும் சென்றார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயுடனான சந்திப்பு குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை இன்று விஜயவாடாவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக தெலுங்கு கங்கா திட்டம் மூலம் சென்னைக்குத் தேவைப்படும் குடிநீர் மற்றும் தொலைநோக்குத் திட்டமான கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் நாங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.

It was a pleasure to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennai’s drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious Godavari–Cauvery river interlinking initiative.


Andhra Pradesh has already released 4.08 TMC of water to Chennai this year. Despite our own water constraints, we remain committed to supporting our neighbouring state, while balancing the needs of our people.

I firmly believe that water should be a source of cooperation, not conflict. With close coordination among states and the support of the Union Government, the Godavari–Cauvery river interlinking project can provide a lasting solution to water scarcity, transform agriculture and bring prosperity to lakhs of farmers across South India.

Together, we can turn shared water resources into shared prosperity.

@CMOTamilnadu

— N Chandrababu Naidu (@ncbn) October 13, 2026

ஆந்திரப் பிரதேசம் இந்த ஆண்டில் இதுவரை சென்னைக்கு 4.08 டி.எம்.சி (TMC) தண்ணீரை விடுவித்துள்ளது. எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருந்தபோதிலும், எங்கள் மக்களின் தேவைகளைச் சமநிலையில் கவனித்துக்கொண்டு, அதே வேளையில் அண்டை மாநிலத்திற்குத் துணைநிற்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

நீர் என்பது மோதலுக்கான காரணமாக இருக்கக்கூடாது, மாறாக அது ஒத்துழைப்புக்கான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாநிலங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டமானது தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு, விவசாயத்தை மேம்படுத்தி, தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வளமான வாழ்வை அளிக்கும். நாம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், பகிரப்பட்ட நீர் வளங்களை பகிரப்பட்ட வளமாக மாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சந்திப்பில், சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் 3 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க ஆந்திரப் பிரதேச அரசு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

Previous Post

ஷிரந்தி தொடர்பில் வெளிவரும் அடுக்கடுக்கான அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள்

Next Post

ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? | Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal

Next Post
ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? | Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal

ரூ.1 லட்சம் கோடி வருமானத்தை இழக்கத் தயாரானதா மத்திய அரசு.. LTCG வரி நீக்கம்? நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? | Is Govt Ready to Forgo ₹98,000 Cr Tax Revenue? Nirmala Sitharaman’s Big Hints on LTCG Removal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin