• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பிரதேசங்களை ஆட்டிப்படைக்கும் அரச அதிகாரிகள்: வேடிக்கை பார்க்கும் அரசு

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பிரதேசங்களை ஆட்டிப்படைக்கும் அரச அதிகாரிகள்: வேடிக்கை பார்க்கும் அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இல்லாத மக்களிடத்து சட்டத்தின் பாய்ச்சலும், அதிகாரமுடைய கைகளின் ஓங்கல்களும் சற்று மேட்டுமத்தனத்துடன்தான் இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.



காரணம், படித்தவர்களும், இருப்பவர்களும் கொலையே செய்தாலும் வால் பிடிக்கும் ஒரு சமுதாயக்கட்டமைப்பு தற்காலத்தில் மேலோங்கியுள்ளது.



இதற்கு நல்ல எடுத்துக்காட்டுதான் அண்மையில் பூநகரி முழங்காவில் பகுதியில் சட்டவிரோதமாக கடை ஒன்று அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு வியாபாரியின் கடை அகற்றப்பட்ட விதம்.


யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள் சட்டவிரோதமாக கடை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பிரதேச சபை செயலாளர் மற்றும் வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் குறித்த கடையை உடைத்து அங்கிருந்து அகற்றி இருந்தனர்.


இந்த விடயம் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகள் என பரவி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


காரணம், சாதாரண மக்களுக்கு சட்டம் தெரியவில்லை என்றால் அது கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய விடயம் ஆனால் படித்த சில அரச அதிகாரிகள் இவ்வாறு சட்டத்தை அடக்குமுறைக்காக கையில் எடுப்பது என்பது மக்களுக்கு சட்டம் மீதான கேள்வியை ஏற்படுத்துகின்றது.


அரச நிலத்தில் சட்டவிரோதமாக ஒரு கட்டிடமோ அல்லது பெட்டி கடையோ அமைக்கப்பட்டால் முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டிடத்தையோ அல்லது கடையையோ அகற்றும் அறிவிப்பை உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.


அறிவிப்பை பின்பற்றாதவர்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம், கட்டிடத்தை அல்லது கடையை அகற்றும் உத்தரவை வழங்கினால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆனால், இங்கு சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு எவ்வித முன்னறிவிப்போ அல்லது எழுத்து மூல ஆவணமோ வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு எவ்வித சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல், எவ்வித முன்னறிவிப்பும் வழங்காமல் திடீரென நிலத்தை விட்டு அகற்றுமாறு தெவித்து அதிகாரத்தை தனக்கு ஏற்றாற் போல அரச அதிகாரிகள் பயன்படுத்துவது என்பது அடாவடித்தனத்தின் உச்சக்கட்டமாகவே உள்ளது.



இதுவே ஒரு படித்த அரச அதிகாரியோ அல்லது அரசியல் தலைமையோ குறித்த இடத்தில் ஒரு கட்டிடத்தை கட்டி இருந்தால் அதற்கு பின்பற்றப்படும் நடவடிக்கை என்பது அங்கு வேறுமாதிரி இருந்து இருக்கும்.



ஆனால் ஒரு பெட்டி கடையை அமைத்த சாதாரண மனிதன் என்பதால் அவருக்கு அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை சற்று அதிகார வர்க்கத்தில் இருந்துள்ளது.


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த காரணத்தினால் செய்வதறியாது கடையை அமைத்த நிலையில் உரிய சட்ட ரீதியான  நடவடிக்கை இன்றி அங்கு அவர் மீது  மேற்கொள்ளபட்ட அடக்குமுறை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


யுத்த காலத்தில் தென்னிலங்கை தரப்பில் பாதிக்கப்பட்டதாக இராணுவ வீரர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை அரசாங்கம் ஏற்படுத்தி தரும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத்தையும் தேடி தர வேண்டியது அரசின் கடமை.


ஆனால், தற்போது வரை யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உரிய வேலை இல்லாமல், மூன்று வேலை சரியான உணவில்லாமல், கை மற்றும் கால் என இழந்து குடும்பத்திற்காக சரியான வறுமானம் இன்றி திண்டாடும் மக்களுக்கு எவ்வித வாழ்வாதார நடவடிக்கைகளும் அரச தரப்பில் எடுக்கப்படவில்லை.


இதனை தாண்டி அண்மைக்காலங்களிலும்,

  1. முல்லைத்தீவில் (Mullaitivu) முதியோர் கொடுப்பனவு பெற சென்ற முதியவர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விடப்பட்டமை.

  2. யாழில் மனிதாபிமானற்ற முறையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டமை.

  3. யாழ் (Jaffna) – வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை (Point Pedro) மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் மூர்க்கத்தனமாக சீவல் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டமை.



என அரச அதிகாரிகளின் அடாவடித்தனம் தமிழர் தரப்பில் சாதாரண மக்களிடத்தில் தேவைக்கு ஏற்றாற் போல அதிகமாக விளையாடுகின்றது.

இருப்பினும், தற்போது பூநகரி பகுதியில் இது சற்று அதிகம் தலைததூக்கியுள்ளதுடன் இதனால் மக்கள் பாரிய நெறுக்கடிக்கு முகம் கொடுப்பதுடன் அதே நேரத்தில் அரச அதிகாரிகள் பாரிய நலன்களையும் பெற்று வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களது சுயலாபத்திற்காக அன்றைய நாளுக்கான தேவையை நோக்கி தேடி ஓடும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை சில அரச அதிகாரிகள் பிடிங்கி எடுப்பது வெட்கி தலைகுனிய வைக்கின்றது.

இந்தநிலையில், இது குறித்த விரிவான பிண்ணனி, சர்ச்சையை ஏற்படுத்திய பூநகரி கடை விவகாரம், அங்குள்ள மக்களின் நிலை மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராய நேரடியாக புறப்பட்டது ஐபிசி தமிழ்,            

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

MyKiosk 2.0 க்கு பல்வேறு வகையான விமர்சனங்கள் – Malaysiakini

Next Post

அதிரடியாக உயர்ந்த மதுபானங்களின் விலை.. எவ்வளவு தெரியுமா? – உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்த அரசு!

Next Post
அதிரடியாக உயர்ந்த மதுபானங்களின் விலை.. எவ்வளவு தெரியுமா? – உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்த அரசு!

அதிரடியாக உயர்ந்த மதுபானங்களின் விலை.. எவ்வளவு தெரியுமா? - உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்த அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin