Last Updated:
450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன. ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனையாகிறது.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்த்தப்படுவதாக அம்மாநில கலால்துறை தெரிவித்துள்ளது.
மதுவுக்கு குறைந்த வரி விதிக்கப்படுவதால் பாண்டிச்சேரியில் குறைந்த விலைக்கு மது கிடைக்கிறது. இதனால் வார இறுதி நாட்களில் புதுச்சேரி எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் இருந்தும் மது பிரியர்கள் புதுவை செல்கின்றனர். புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன.
ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனையாகிறது. 2017க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது. பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கொரோனா வரி விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை இருந்தன. இதன்பின் நீக்கப்பட்டன.
எனினும், அவ்வப்போது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசின் வருவாயை பெருக்க மதுபானங்கள் மீதான கலால் வரியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விலையை கலால்துறை உயர்த்தியுள்ளது. இதில், ஒரு லிட்டர் மதுபானத்துக்கு 50 முதல் 325 ரூபாய் வரையும் பீர் வகைகளுக்கு 30 ரூபாய் வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கலால் துறை அறிவித்துள்ளது.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)
அதிரடியாக உயர்ந்த மதுபானங்களின் விலை.. எவ்வளவு தெரியுமா? – உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்த புதுச்சேரி அரசு!


