தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(11.09.2026) இடம்பெற்றுள்ளது.
மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக
தமிழகத்திலிருந்து படகு மூலம் பயணித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் கட்டுப்பாட்டு
எல்லைக்குள் நின்ற சமயமே மேற்படி சிறுவன் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுவன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

