உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது வரலாற்றில் இன்னொரு மைல்கல் மாதிரியான சீர்திருத்தம். இதன்மூலம் பெண்கள் வெறும் வாக்காளர்கள், பயனாளர்களாக இல்லாமல், பல்வேறு இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர்களாக, மாமன்ற உறுப்பினர்களாக, வார்டு உறுப்பினர்களாக உருவெடுத்தனர். நிதிநிலை அறிக்கை, முக்கிய முடிவுகள், வருங்காலம் குறித்து பெண்கள் முடிவெடுத்தனர்.

