• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை வரலாற்று வீழ்ச்சி.. 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம்.. மக்களே உடனே கடைக்கு போங்க..!! | Tamil Nadu Gold Rate Today: 22-Carat Gold Slumps ₹310 Per Gram; Best Weekend to Buy Gold Before Diwali?

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை வரலாற்று வீழ்ச்சி.. 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம்.. மக்களே உடனே கடைக்கு போங்க..!! | Tamil Nadu Gold Rate Today: 22-Carat Gold Slumps ₹310 Per Gram; Best Weekend to Buy Gold Before Diwali?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை வரலாற்று வீழ்ச்சி.. 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம்.. மக்களே உடனே கடைக்கு போங்க..!!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தங்கம் விலை பெருமளவில் குறைந்து மிகப்பெரிய சர்ப்பிரைஸ் தந்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தங்கம் விலை குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது . சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 310 ரூபாய் சரிந்து 12,730 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 2,480 ரூபாய் விலை சரிந்து 1,01,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. கிட்டதட்ட ஜனவரி மாதத்திற்கு பிறகு தங்கம் விலை அதாவது 10 மாதங்களுக்கு பின் தங்கம் விலை இந்த அளவுக்கு சரிந்துள்ளது.

தங்கம் விலை வரலாற்று வீழ்ச்சி.. 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம்.. மக்களே உடனே கடைக்கு போங்க..!!

அக்டோபர் மாதம் தங்கம் வாங்குவதற்கான சிறந்த மாதம் என கூறும் அளவுக்கு தங்கம் விலை பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. இந்த மாதத்திலேயே இன்று தான் தங்கம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்த வாரத்தில் 3 நாட்களில் விலை உயர்ந்த தங்கம், 2 நாட்கள் விலை சரிந்துள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் நாளையும் இதே விலைக்கு தான் தங்கம் விற்கப்படும். எனவே இந்த வீக் எண்ட் தங்கம் வாங்குவதற்கு சிறந்த ஒரு வீக் எண்டாக இருக்கிறது. தங்கம் தனது வரலாற்று உச்சபட்ச விலையான ஒரு பவுன் 1.34 லட்சத்தை விட 33 ,000 ரூபாய் விலை குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,888 ரூபாய்க்கும் 10 கிராம் 1,38,880 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,416 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் சரிந்து 2 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இருந்து கடந்த மூன்று நாட்களும் விலை குறைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் வர கூடிய மாதங்களில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலை, வெளியிட்டுள்ளது. எனவே வட்டி உயரும் என்ற எதிர்ப்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் விலை சரிகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,875 டாலருக்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்தியாவிலும் தங்கம் விலை குறைய காரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Tamil Nadu Gold Rate Today: 22-Carat Gold Slumps ₹310 Per Gram; Best Weekend to Buy Gold Before Diwali?

Gold prices in Tamil Nadu witnessed a sharp fall today, with 22-carat jewellery gold reportedly dropping ₹310 per gram to ₹12,730 and one sovereign falling ₹2,480 to ₹1,01,840./ தங்கம் விலை வரலாற்று வீழ்ச்சி.. 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம்.. மக்களே உடனே கடைக்கு போங்க..!!

Story first published: Saturday, October 31, 2026, 10:01 [IST]

Other articles published on Oct 31, 2026

Read More

Previous Post

Dharmapuri murder: கஞ்சா போதையில் தாயை கொன்றாரா தருமபுரி தேவராஜ்? போலீஸார் பரபரப்பு விளக்கம் | Police explains about Dharmapuri murder case

Next Post

பட்ஜெட் 2027 மாணவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இந்திய சமூகத்திற்கு பெரும் நிவாரணம்: பெர்மிம் வரவேற்பு | Makkal Osai

Next Post
பட்ஜெட் 2027 மாணவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இந்திய சமூகத்திற்கு பெரும் நிவாரணம்: பெர்மிம் வரவேற்பு | Makkal Osai

பட்ஜெட் 2027 மாணவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இந்திய சமூகத்திற்கு பெரும் நிவாரணம்: பெர்மிம் வரவேற்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin