தங்கம் விலை கம்மியா இருக்கும் போதே வாங்கி போடுங்க! இல்லன்னா சிக்கல்! எச்சரிக்கும் ராபர்ட் கியோசாகி!
“ரிச் டேட் புவர் டாட்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் தான் ராபர்ட் கியோசாகி. இவர் ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமின்றி நல்ல முதலீட்டாளரும் கூட. சமீபத்தில் தங்கம் தொடர்பான ஒரு அதிரடி கணிப்பை இவர் தெரிவித்துள்ளார். தற்போதைய உலகப் பொருளாதாரத்தை வைத்து பார்க்கும் போது இனிவரும் காலங்களில் கண்டிப்பாக தங்கம் ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்று கணித்துள்ளார். இது தொடர்பாக ராபர்ட் கியோசாகி தனது X பக்கத்தில் போஸ்ட் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.
தன்னுடைய X பதிவில், “தங்கம் தன்னுடைய பாதையில் போக தொடங்கி விட்டது. என் கணிப்புகள் சில நேரங்களில் தவறாக கூட போகலாம். ஆனால் இனிவரும் நாட்களில் கண்டிப்பாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறுமுகமாக தான் இருக்கக்கூடும். கடந்த 2000 ஆண்டில் தங்கம் விலை ஏறத் தொடங்கியது. அப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் என்னவோ 300 டாலராக மட்டுமே இருந்தது. அப்போதிலிருந்தே நான் தங்கம் வாங்கத் தொடங்கி விட்டேன். நான் மட்டுமல்ல ஜிம் ரிகார்ட்ஸ் எதிர்காலத்தில் தங்கம் விலை அவுன்ஸ் ஒன்று 35,000 டாலரை எட்டும் என்று கூறியிருக்கிறார்.
உலகப் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது. கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தங்கம் நீண்ட காலத்திற்கு கண்டிப்பாக உயரக்கூடும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் ஒரு புறம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் முதலீட்டில் கண்டிப்பாக பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். எனவே நான் சொல்வதைக் கேட்டு உடனடியாக முதலீட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். தொடர்ந்து அது தொடர்பாக படியுங்கள். நீங்களே சுயமாக யோசித்து, ஆராய்ச்சி செய்து அதன் பிறகு முடிவெடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து ராபர்ட் கியோசாகி அதிகளவிலான பணம் அச்சிடுதலாலும், அதிகரித்து வரும் அரசு கடன்களாலும் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரித்து வருகிறார். அதோடு தங்கம் மீது நல்ல நம்பிக்கையை கொண்டிருக்கும் இவர், அவ்வப்போது தனது கணிப்புகள் சரியாக இருந்ததில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் தங்கம் அவுன்ஸ் 1-க்கு 3991.49 டாலராக உள்ளது. நவம்பர் மாதத்திற்கு பிறகு தங்கம் விலை 4000 டாலருக்கு கீழே சரிந்தது இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டியது. அப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 டாலரைத் தொட்டது. அதோடு ஒப்பிடும்போது தற்போது வரையில் தங்கம் சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளது.
இவரைப் போலவே நிபுணர்களும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30,000-த்தை எட்டும் என்று கணித்துள்ளனர். இன்றைய விலையே அதிகமாக தெரிகிறது.. அப்படி இருக்கையில் நாளை இந்த அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டால் முன்பே வாங்கியிருக்கலாம் என்று நாமே சொல்லும் சூழல் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. இனிவரும் காலங்களில் தான் தங்கத்தின் பாதை எப்படி இருக்க போகிறது? என்பது தெரியவரும்.

