• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை அதிரடி!! ரூ.17,000 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!! 20 நாட்களில் 14% விலை உயர்வு..!! | Gold Price Shock in Tamil Nadu: 22K Gold Hits ₹1,19,600 Per Sovereign After ₹13,552 Surge in August

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை அதிரடி!! ரூ.17,000 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!! 20 நாட்களில் 14% விலை உயர்வு..!! | Gold Price Shock in Tamil Nadu: 22K Gold Hits ₹1,19,600 Per Sovereign After ₹13,552 Surge in August
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை அதிரடி!! ரூ.17,000 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!! 20 நாட்களில் 14% விலை உயர்வு..!!

ஆகஸ்ட் மாதத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 3ஆவது வாரமாக தங்கம் விலை ஏற்றத்துடனே நிறைவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,19,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி!! ரூ.17,000 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!! 20 நாட்களில் 14% விலை உயர்வு..!!

தங்கம் விலை தொடர்ந்து 7ஆவது நாளாக விலை உயர்ந்து சாமானிய மக்களை கலங்கடிக்க வைத்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம்13,256 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால் இன்று 14,950 ரூபாயை தொட்டுவிட்டது. அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1,694 ரூபாயும் சவரனுக்கு 13,552 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 10 கிராமுக்கு 16,940 ரூபாய் விலை கூடியுள்ளது.

மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திலேயே இன்றைய தினம் தான் தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே தங்கம் விலை சுமார் 14% விலை உயர்ந்திருப்பதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 109 ரூபாய் விலை உயர்ந்து 16,309 ரூபாய்க்கும் 10 கிராம் 1,63,090 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,01,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.7 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 270 ரூபாய் வரை வந்துவிட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 35 ரூபாயும் கிலோவுக்கு 35,000 ரூபயும் விலை கூடியுள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,600 டாலருக்கு வர்த்தகமாகிறது. தொடர்ந்து உலக சந்தையில் தங்கம் விலை உயர்வதே இந்தியாவிலும் சில்லறை விற்பனையில் தங்கம் விலை உயர காரணமாக உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Shock in Tamil Nadu: 22K Gold Hits ₹1,19,600 Per Sovereign After ₹13,552 Surge in August

தங்கம் விலை அதிரடி!! ரூ.17,000 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!! 20 நாட்களில் 14% விலை உயர்வு..!! / Gold prices have surged sharply across Chennai, Coimbatore, Madurai, Trichy and other Tamil Nadu cities, with 22-carat jewellery gold rising by ₹100 per gram to ₹14,950. One sovereign (8 grams) now costs ₹1,19,600, up ₹800 in a single day.

Story first published: Saturday, August 22, 2026, 10:55 [IST]

Other articles published on Aug 22, 2026

Read More

Previous Post

யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது

Next Post

செரியானில் ‘மிகவும் மோசமான’ காற்றுத் தரம், மேலும் 10 பகுதிகள் பாதிப்பு

Next Post

செரியானில் ‘மிகவும் மோசமான’ காற்றுத் தரம், மேலும் 10 பகுதிகள் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin