• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தங்கத்தை கொத்து கொத்தாக விற்கும் ரஷ்யா.. உலக நாடுகளை குழப்பும் புதின்.. ஷாக்கான வல்லரசுகள் | Why Is Russia Secretly Selling Its Massive Gold Reserves?

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தங்கத்தை கொத்து கொத்தாக விற்கும் ரஷ்யா.. உலக நாடுகளை குழப்பும் புதின்.. ஷாக்கான வல்லரசுகள் | Why Is Russia Secretly Selling Its Massive Gold Reserves?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Shyamsundar I

Time
Published: Sunday, August 23, 2026, 10:41 [IST]

மாஸ்கோ: உலக அரங்கில் ரஷ்யா என்றாலே அதிகமான கனிம வளங்களும், அசைக்க முடியாத தங்கக் கையிருப்பும் தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால், உக்ரைன் போருக்குப் பிந்தைய சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டின் தங்கக் கையிருப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

ரஷ்யாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் தங்க இருப்பு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

russia

தங்கத்தின் அளவு எவ்வளவு குறைந்துள்ளது?

ஒரு காலத்தில் உலகிலேயே அரசாங்க அளவில் அதிக தங்கம் வாங்கும் முன்னணி நாடாக ரஷ்யா இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி:

நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஜூலை இறுதி வரையிலான ஏழு மாதங்களில் மட்டும், ரஷ்யாவின் மத்திய வங்கி சுமார் 16 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி, ரஷ்யாவிடம் உள்ள மொத்த தங்கத்தின் இருப்பு 7.32 கோடி அவுன்ஸாக குறைந்துள்ளது

இது ஜனவரி 2020-க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த தங்க இருப்பாகும். இந்த 7 மாத கால இடைவெளியில் ரஷ்யா விற்ற தங்கத்தின் மொத்த சந்தை மதிப்பு மட்டும் தோராயமாக 33.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

தங்கம் வாங்கிய நாடே விற்கத் தொடங்கியது ஏன்?

ஒரு சாதாரண குடும்பத்தில் வரவு குறைந்து செலவு கூடும்போது, சேமித்து வைத்திருக்கும் தங்க நகைகளை அடகு வைப்பது அல்லது விற்பது வழக்கம். அதே போன்ற ஒரு நெருக்கடிதான் தற்போது ரஷ்ய அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு வரை ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தின் பெரும்பகுதியை அந்நாட்டு மத்திய வங்கியே நேரடியாக வாங்கிக் குவித்தது. பின்னர் 2022-ல் உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்தன. இதனால் ரஷ்யாவால் தனது தங்கத்தை வெளிநாடுகளுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியாமல் போனது. அந்த நேரத்தில் உள்நாட்டு தங்க உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற மீண்டும் தங்கம் வாங்கப்போவதாக மத்திய வங்கி அறிவித்தாலும், பெரிய அளவில் வாங்கவில்லை.

கடந்த 2022 போருக்குப் பிறகு தனது தங்க உற்பத்தி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடுவதையே மாஸ்கோ முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

எண்ணெய் வருவாய் சரிவு

ரஷ்யாவின் பிரதான வருமானமே கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிதான். ஆனால், மேற்கத்திய நாடுகளின் விலை வரம்பு மற்றும் தடைகள் காரணமாக, ரஷ்யாவின் எரிசக்தி வருவாய் கணிசமாகக் குறைந்தது.

இதனால் ஏற்பட்ட பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, அந்நாட்டு நிதி அமைச்சகம் தனது இருப்பில் இருந்த தங்கத்தையும், டாலரையும் சந்தையில் விற்கத் தொடங்கியது.

ரஷ்ய அரசு பட்ஜெட் தேவைகளுக்காகத் தங்கத்தை விற்கும்போது, நாட்டின் பணமான ரூபிள் கடுமையான பணவீக்கத்தால் சரிய வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, ரஷ்ய மத்திய வங்கி ‘மிரர் மெக்கானிசம்’ என்ற பொருளாதார உத்தியைப் பயன்படுத்துகிறது.

அதாவது, நிதி அமைச்சகம் வெளிச்சந்தையில் தங்கம் அல்லது அந்நியச் செலாவணியை விற்கும் அளவுக்கு நிகரான பரிவர்த்தனைகளை மத்திய வங்கி உள்நாட்டுச் சந்தையில் மேற்கொண்டு, பொருளாதார ரீதியாக ரூபிளின் மதிப்பையும் பாதுகாக்கிறது.

உக்ரைன் மீதான போர் நீடிக்கும் வரையிலும், சர்வதேச வர்த்தகத் தடைகள் தளர்த்தப்படாத வரையிலும், ரஷ்யா தனது செலவுகளை ஈடுகட்ட தங்கக் கையிருப்பை மேலும் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு வல்லரசு நாட்டின் கஜானாவில் தங்க இருப்பு குறைந்து வருவது, உலகப் பொருளாதாரத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

English summary

Why Is Russia Secretly Selling Its Massive Gold Reserves?

Read More

Previous Post

அமெரிக்கா–கனடா வர்த்தக முறிவு – தற்சார்பா அல்லது சுய நாசமா? – Sri Lanka Tamil News

Next Post

Sugar Price Hike | சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு… மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை | வணிகச் செய்திகள்

Next Post
Sugar Price Hike | சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு… மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை | வணிகச் செய்திகள்

Sugar Price Hike | சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு... மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin