Last Updated:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்சல்மார், பார்மர் மற்றும் ராஜஸ்தானின் எல்லையோரம் அமைந்துள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து நேற்று முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா தீவிரமாக நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் ராஜஸ்தானில் பாகிஸ்தான் உளவு ட்ரோன் விமானங்கள் இந்திய எல்லை பகுதியில் பறந்துள்ளன.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. நேற்று மாலை முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறலை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக நேற்று இரவில் ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறிய ரக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்குமாறு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது
இந்த நிலையில் இன்று ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமாக பாகிஸ்தான் உளவு மேற்கொண்டுள்ளது. இந்த ட்ரோன் விமானங்கள் குறிப்பிட்ட தூரம் வரை பறந்து உளவு பார்த்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை போலீசார் அலெர்ட் செய்து வருகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்சல்மார், பார்மர் மற்றும் ராஜஸ்தானின் எல்லையோரம் அமைந்துள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
May 11, 2025 10:19 PM IST


