அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தான் ஈரான் மீது போரை தொடங்கின.
ஆனால், இப்போது அமெரிக்கா “போர் நிறுத்தம்’ என்கிற வெள்ளைக் கொடியோடு நிற்க, இஸ்ரேல் இன்னும் முறுக்கிக் கொண்டே இருக்கிறது.
அதாவது, அமெரிக்காவும், ஈரானும் டிஜிட்டல் முறையில் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்டு விட்டது.
ஆனால், இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. அதனால், ஈரான் ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடுகிறது… அதில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது. இப்படி மீண்டும் குழப்பம் உண்டாகிறது.
இதற்கு மிக முக்கிய காரணமே இஸ்ரேல் தான்.
இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
துருக்கியில் நேட்டோ மாநாடு ஜூலை 7-8 நடக்க உள்ளது. இதில் ட்ரம்ப் கலந்துகொள்கிறார்.
இதனால், இந்தப் பயணத்திற்குப் பிறகு ட்ரம்பை சந்திக்கிறார் நெதன்யாகு என்று கூறப்படுகிறது.

