Last Updated:
அதேநேரத்தில் துணைத் தலைவர்பதவிக்கு சுயேச்சையாக களம் கண்ட தீபான்ஷு ஷவுகீன் 30,615 வாக்குகளைப் பெற்று துணைத் தலைவராக தேர்வானார்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லிப் பல்கலைக்கழகத் தேர்தலில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வலதுசாரி மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியுள்ளது.
அரசியல் கட்சிகள் பங்கேற்கும் தேர்தலுக்கு நிகராக நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்கும் டெல்லிப் பல்கலைக்கழக மாணவர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகளுக்கு நிகரான வாக்குறுதிகளும், இலவசங்களும் உண்டு.
அவ்வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நடப்பாண்டுக்கான தேர்தலில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் 40.46 சதவீதம் மாணவர்கள் வாக்களித்தனர். மொத்தம் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானாோர் வாக்குப் பதிவு செய்தனர்.
சனிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 20 சுற்றுகள் முடிவில் வலதுசாரி அமைப்பான ABVPயின் யஷ் தபஸ் 24 ஆயிரத்து 576 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்தபடியாக 22,523 வாக்குகளைப் பெற்ற NSUI அமைப்பின் விஜய் சங்கர் மீனாவை வீழ்த்தி தலைவர் பதவியை கைப்பற்றினார்.
ABVP அமைப்பின் ரியா சாவ்டி செயலாளர் பதவியையும், லக்ஷ்யா ராஜ் இணைச் செயலாளர் பதவியையும் கைப்பற்றினர். அதேநேரத்தில் துணைத் தலைவர்பதவிக்கு சுயேச்சையாக களம் கண்ட தீபான்ஷு ஷவுகீன் 30,615 வாக்குகளைப் பெற்று துணைத் தலைவராக தேர்வானார்.

![New Delhi [India], September 19 (ANI): ABVP candidates Yash Dabas and Riya were leading in the President and Secretary posts, respectively, while independent candidates Deepanshu Shokeen and Vishes New Delhi [India], September 19 (ANI): ABVP candidates Yash Dabas and Riya were leading in the President and Secretary posts, respectively, while independent candidates Deepanshu Shokeen and Vishes](https://images.news18.com/tamil/uploads/2026/09/ani_20260919052850_1789836773378-1200x675.jpg?impolicy=website&width=415&height=270)
