• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது: பிப்.5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் | Campaigning in Delhi ends this evening

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லியில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது: பிப்.5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் | Campaigning in Delhi ends this evening
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3-வது முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து சிக்கி சிறை சென்றது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2024 செப்டம்பர் 21-ம் தேதி முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியில் அமைச்சராக இருந்த அதிஷி முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், தற்போது நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பேசி வருகிறார். டெல்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சி கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தே.ஜ. கூட்டணியில் 2 இடங்களை மட்டும்

கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழு வீச்சில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அங்கு பல மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிப்பதால், தே.ஜ.கூட்டணியில் உள்ள பிரபல தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். 70 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி ஆட்சிக்கு டெல்லி அதிக விலை கொடுத்துவிட்டது. அதில் இருந்து விடுபடடெல்லி முடிவு செய்துவிட்டது. சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு அக்கட்சியின் கொள்கைகள் வழிவகுத்தன. மக்களை கொள்ளையடித்தவர்கள், அதற்கு விலை கொடுத்தாக வேண்டும். கடந்த 11 ஆண்டு களில் தலைநகரையே அழித்துவிட்டது ஆம் ஆத்மி. பாஜக தேர்தல் அறிக்கையில் மூத்த குடிமக்கள், பெண்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவாதம் அளித்தால், இந்த மோடி முழு மூச்சுடன் செயல்பட்டு அதை நிறைவேற்றுவார்.

பட்ஜெட்டில் முதல்முறையாக ரூ.12 லட்சம்வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. மோடியின் வாக்குறுதிகளை பட்ஜெட் நிறைவேற்றியுள்ளது. சுற்றுலா, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வரும் 8-ம் தேதி பாஜக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைக்கும். பாஜக அரசு அமைந்ததும், வாக்குறுதிகளை நிறைவேற்றும். மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்துக்குள், டெல்லியில் உள்ள பெண்கள் ரூ.2,500 உதவித் தொகை பெறத் தொடங்குவார்கள். பெண்கள் எனக்கு கவசமாக பணியாற்றி மிகப் பெரிய பங்களிப்பை அளித்ததால்தான், எனது அரசு மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. அதேபோல, டெல்லியிலும் பெண்கள் ஆதரவுடன் பாஜக வெற்றி பெறும். டெல்லி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள இரட்டை இன்ஜின் அரசு தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிகட்ட பிரச்சாரம்: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனால், உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || கிணற்றில் தவறி விழுந்து குழந்தை மரணம்

Next Post

பட்ஜெட் நாளன்று வந்த சூப்பர் அறிவிப்பு! குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

Next Post
பட்ஜெட் நாளன்று வந்த சூப்பர் அறிவிப்பு! குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

பட்ஜெட் நாளன்று வந்த சூப்பர் அறிவிப்பு! குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin