டிரம்ப் மூலம் அமெரிக்க டெக் துறைக்கு வேட்டு.. சொன்னது யாருன்னு பாத்தீங்களா..!
டிரம்ப் தலைமையிலான அரசு தொடர்ந்து விசா, கிரீன் கார்டு கட்டுப்பாடுகளை விதித்து வருவது மூலம் புதிதாக அமெரிக்காவுக்கு வருவோர் மட்டும் அல்லாமல் ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் எதிரொலியாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் மட்டும் 12000த்தை கடந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பிரெசிடென்ட் ஆக இருக்கும் பிராட் ஸ்மித், டிரம்ப் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக வெளிப்படையான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

அயர்லாந்து நாட்டின் டிப்ளின் நகரில் நடந்த சர்வதேச ஏஐ கூட்டத்தில் பிராட் ஸ்மித் கலந்துகொண்ட போது பொலிட்டிகோ பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்தார், இதில் சமீபத்தில் டிரம்ப் அரசு வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு பெறும் PERM திட்டத்தில் பங்கு பெற மைக்ரோசாப்ட் உட்பட 7 நிறுவனங்கள் மீது தடை விதித்ததை பிராட் ஸ்மித் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் டிரம்ப்-ன் PERM திட்ட நடவடிக்கை மூலம் அமெரிக்க டெக் துறைக்குப் பல தசாப்தங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அமெரிக்க டெக் நிறுவனத்தால் இந்த ஒரு கட்டுப்பாடு காரணமாக உலகளவில் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தேர்வு செய்ய முடியாது மூலம் டெக் துறையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும் என பிராட் ஸ்மித் எச்சரித்துள்ளார்.
PERM திட்டத்தில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தடை செய்வதாக அறிவித்த போது ஜேடி வான்ஸ் பேசுகையில் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போல் எந்தொரு நிறுவனமும் விசா அமைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியது இல்லை என பேசினார்.
2025ல் மைக்ரோசாப்ட் 6000 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, ஆனால் இதே காலகட்டத்தில் 6000 ஊழியர்களுக்கான விசா ஒப்புதலைப் பெற்றுள்ளது. 3682 பேருக்கு PERM திட்டத்தின் கீழ் கிரீன்கார்டு பெற்றுள்ளது.
இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஊழியர்களின் இடத்திற்காக 1000 விசா விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளது என தெரிவித்தார் ஜேடி வேன்ஸ். இதற்காகவே சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் விளக்கம் கொடுத்தது.
இத்தகைய கடுமையான கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வரையில் பிராட் ஸ்மித் அளித்த பேட்டியில் மைக்ரோசாப்ட் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் எந்தொரு புதிய ஊழியர்களுக்கும் செய்யப்படவில்லை, மாறாக அனைத்து விண்ணப்பங்களும் நீண்ட காலம் நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கே பெறப்பட்டு உள்ளதாக விளக்கம் கொடுத்தார்.
மேலும் PERM திட்டத்தின் கீழ் கிரீன் கார்டு-ஐ பெறுவதில் டெக் நிறுவனங்கள் அதிகப்படியான பங்கீட்டை கொண்டு இருக்கும் காரணத்தால், இத்தகைய தடையும், கட்டுப்பாடும் அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

