• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சவுதி அரேபியா: மத வழிபாட்டு தலத்தில் பாலியல் செயலில் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சவுதி அரேபியா: மத வழிபாட்டு தலத்தில் பாலியல் செயலில் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரியாத், சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மெக்காவில் பாலியல் செயல் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சவுதி அரேபியா. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தினரின் புனித வழிபாட்டு தலங்களான மெக்கா, மதீனா உள்ளன. இந்த வழிபாட்டு தலங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் யாத்திரை செல்கின்றனர்.

இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் என்ற ஆணும், சிதி அக்தர் என்ற பெண்ணும் சவுதி அரேபியாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இருவரும் மெக்காவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலமான மசூதியில் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இதையடுத்து இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரண தண்டனை நிறைவேற்றம்
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ஷரியத் சட்டப்படி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக கோர்ட்டு உத்தவிட்டது. இதனை தொடர்ந்து நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் ஆகிய இருவருக்கும் நேற்று முன் தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் கணவன், மனைவியா? சம்பவம் நடந்த இடம் எது? சம்பவத்திற்கான ஆதாரங்கள் உள்பட எந்த விவரங்களையும் சவுதி அரேபியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்குமுன் இது குறித்து வங்காளதேச அரசுக்கு சவுதி அரேபியா எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.



Read More

Previous Post

டிரம்ப் மூலம் அமெரிக்க டெக் துறைக்கு வேட்டு.. சொன்னது யாருன்னு பாத்தீங்களா..! | Microsoft Brad Smith Hits Back at JD Vance Over H-1B Visa Abuse and PERM Suspension Claims

Next Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin