அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் சிறுவயதில் வாழ்ந்த வீடு 1.93 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 2.4 மில்லியன் வெள்ளி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கின் குயின்ஸ் (Queens) பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில், டிரம்ப் தனது நான்கு வயது வரை வாழ்ந்திருந்தார்.
டிரம்ப்பின் தந்தை ஃபிரெட் டிரம்ப் (Fred Trump) என்பவரால் 1940ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஐந்து படுக்கையறைகள் மற்றும் மூன்று குளியலறைகளைக் கொண்ட இவ்வ வீடு, கடந்த ஆண்டு டாமி லின் (Tommy Lin) என்பவரால் 835,000 டாலருக்கு வாங்கப்பட்டது.
பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, குடிநீர் வசதியின்றி, உடைந்த குழாய்கள் மற்றும் பூஞ்சைத் தொல்லைகளுடன் பாழடைந்த நிலையில் இருந்த இந்த வீட்டை, அவர் சுமார் 500,000 டாலர் செலவு செய்து எட்டு மாதங்களில் முழுமையாகப் புதுப்பித்தார்.
நவீனச் சமையலறை, புதிய மரத்தளங்கள் மற்றும் ஆடம்பரக் குளியலறைகள் உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீடு தற்போது 1.93 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

