மத்திய கிழக்கு போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய இடத்திலிருந்து ஈரான் தூதுக்குழு வெளியாறியது.
மத்தியஸ்தத் தரப்புகளில் ஒன்றாக கத்தார் தூதுக்குழுவைச் சந்தித்த பின்னர், ஈரான் தூதுக்குழு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தை விட்டு வெளியேறியது என ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் லூசெர்னே நகரில் உள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கடுமையான விளைவு
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதாவது லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளை ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த கருத்தால் ஆத்திரமடைந்த ஈரான் பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தனர்.
அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஈரானின் ஆயுதப் படைகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் காலிபாப் எச்சரித்தார்.
“அவர்கள் தங்கள் அறிக்கைகளில் கவனமாக இருப்பது நல்லது; அவர்களுக்கு வேறு விதமாகப் பதிலளிக்க எங்கள் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன. அவர்கள் என்ன சொன்னாலும், நாங்கள் தான் செயல்படுவோம்,” என்று ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

