ஜோகூர் :
டிங்கி காய்ச்சலைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டு ஜொகூர் மாநில சுகாதாரத் துறை (JKNJ) மூலம் RM3.32 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 6,642 அபராதங்கள் விதிக்கப்பட்டன.
குறித்த அபராதத்தை 65 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர் என்று ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.
“EPI வாரம் 52/2024 இல் ஒட்டுமொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 13,190 ஆக பதிவாகியிருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 22.2 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது கடந்தாண்டு 10,794 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.


