• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்! | India-Japan to Trade in Rupee-Yen Bypassing US Dollar – Modi-Takaichi Summit to Finalise Local Currency Deal

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்! | India-Japan to Trade in Rupee-Yen Bypassing US Dollar – Modi-Takaichi Summit to Finalise Local Currency Deal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்!

இந்தியா மீண்டும் டாலரை ஓரம்கட்டும் வேலையை துவங்கியுள்ளது, டாலரை சார்ந்து அதிகம் வர்த்தகம் செய்யும் காரணத்தால் டாலர் மதிப்பு உயரும் போது ரூபாய் மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.

இது இந்திய முதலீட்டு சந்தைக்கும், வர்த்தக சந்தைக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வரும் வேளையில் மத்திய அரசு முக்கிய வர்த்தக நாடுகள் உடன் உள்நாட்டு நாணய பரிமாற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்தை முன்வைத்து வருகிறது.

சமீபத்தில் டிரம்ப் டீடாலரைசேஷன் திட்டத்தை கையில் எடுக்கும் நாடுகளுக்கு வார்னிங் கொடுத்தது மட்டும் அல்லாமல் வரியும் விதித்தார்.

டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்!

இந்த நிலையில் இந்தியா ஜப்பான் உடன் உள்நாட்டு நாணய பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஜூலை 1-3 தேதி இந்தியாவில் நடைபெறும் இந்தியா – ஜப்பான் வருடாந்திர கூட்டம் நடக்க உள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் பிரதமரான Sanae Takaichi தான் பதிவியேற்றிய பின்பு முதல் முறையாக வருகிறார்.

டெல்லியில் நடக்கும் இக்கூட்டத்தில் Sanae Takaichi உடன் பிரதமர் மோடியும் கலந்துக்கொண்டு இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில் இரு நாடுகள் மத்தியில் உள்நாட்டு நாணயம் அதாவது ரூபாய் – யென் நாணய அடிப்படையிலான வர்த்தகத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு கட்டமைப்பை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் இந்தியா – ஜப்பான் மத்தியிலான வர்த்தகத்தில் டாலர் பயன்படுத்தாமல் உள்நாட்டு நாணயத்தை பயன்படுத்த முடியும். இதற்கான கூட்டு அறிக்கையை Sanae Takaichi மற்றும் நரேந்திர மோடி டெல்லி சந்திப்பின் இறுதியில் வெளியிடுவார்கள் என நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது. முதல் முறையாக இரு நாடுகள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக நாணய கூட்டணி குறித்த திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவில் இருக்கும் ஜப்பான் மக்கள் இந்திய வங்கிகளில் கணக்கு திறந்து இரு நாடுகள் மத்தியில் நிதியை எளிதாக டாலருக்கு மாற்றாமல் பரிமாறிக்கொள்ள முடியும். இதோடு நிறுவனங்களும் வங்கிகள் வாயிலாக பேமெண்ட்களை உள்ளூர் நாணயத்தில் செய்துக்கொள்ள முடியும்.

இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஜப்பான் நிதியமைச்சகம் 2026ஆம் நிதியாண்டிலேயே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜப்பான் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை 2019ல் இந்தோனேசியா உடன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டில் மட்டும் இரு நாடுகள் மத்தியில் சுமார் 7.7 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது, இந்த 7.7 பில்லியன் டாலர் வர்த்தகத்தை உள்நாட்டு நாணயத்தில் செய்தால் பெரிய அளவிலான நன்மை இரு நாடுகளுக்கும் கிடைக்கும்.

Share This Article

English summary

India-Japan to Trade in Rupee-Yen Bypassing US Dollar – Modi-Takaichi Summit to Finalise Local Currency Deal

India is moving to reduce its dependence on the US Dollar by finalising a local currency trade agreement with Japan, allowing bilateral trade to be conducted in Rupee and Yen instead of USD. During the upcoming India-Japan summit scheduled for July 1-3 in Delhi, Prime Minister Narendra Modi and Japan’s Prime Minister Sanae Takaichi are expected to formalise the framework for Rupee-Yen based payments, which could significantly benefit businesses and reduce currency conversion costs for both countries.

Story first published: Tuesday, June 30, 2026, 18:10 [IST]

Other articles published on Jun 30, 2026

Read More

Previous Post

இந்தியா vs இங்கிலாந்து முதல் டி20 போட்டி.. எத்தனை மணிக்கு தொடக்கம்? எந்த சேனல், ஓடிடியில் காணலாம்? | IND vs ENG 1st T20I: When and Where to Watch Live Streaming, Match Timings, and Telecast Details in India

Next Post

வணிக ஓட்டுநர்களுக்கான மானிய மருத்துவ பரிசோதனைகள் நாளை தொடங்குகின்றன. – Malaysiakini

Next Post

வணிக ஓட்டுநர்களுக்கான மானிய மருத்துவ பரிசோதனைகள் நாளை தொடங்குகின்றன. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin