• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா vs இங்கிலாந்து முதல் டி20 போட்டி.. எத்தனை மணிக்கு தொடக்கம்? எந்த சேனல், ஓடிடியில் காணலாம்? | IND vs ENG 1st T20I: When and Where to Watch Live Streaming, Match Timings, and Telecast Details in India

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியா vs இங்கிலாந்து முதல் டி20 போட்டி.. எத்தனை மணிக்கு தொடக்கம்? எந்த சேனல், ஓடிடியில் காணலாம்? | IND vs ENG 1st T20I: When and Where to Watch Live Streaming, Match Timings, and Telecast Details in India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Updated: Tuesday, June 30, 2026, 17:05 [IST]

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அயர்லாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு, இந்த தொடரில் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து காணலாம்.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. டி20 சாம்பியனான இந்திய அணி அடைந்த அதிர்ச்சி தோல்வி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது.

IND vs ENG

இந்தத் தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது. அயர்லாந்து தொடருக்குப் பிறகு இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்த, தங்களது சொந்த மண்ணில் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்திய அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய ஆட்டத்திலாவது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அயர்லாந்து டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவருமே சிறந்த வீரர்கள் என்றாலும் ஃபார்மில் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இதனால் கம்பீர் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியை பொருத்தவரை இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 10 மணிக்கு முதல் பந்து வீசப்படும்.

இந்தப் போட்டியை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம். அதேபோல் ஓடிடியை பொருத்தவரை சோனி லைவ் ஓடிடியில் சந்தா செலுத்தி பார்க்கலாம். அயர்லாந்து டி20 தொடரின் போது சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது. இதனை இங்கிலாந்தில் சரி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

English summary

IND vs ENG 1st T20I: When and Where to Watch Live Streaming, Match Timings, and Telecast Details in India

Read More

Previous Post

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

Next Post

டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்! | India-Japan to Trade in Rupee-Yen Bypassing US Dollar – Modi-Takaichi Summit to Finalise Local Currency Deal

Next Post
டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்! | India-Japan to Trade in Rupee-Yen Bypassing US Dollar – Modi-Takaichi Summit to Finalise Local Currency Deal

டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்! | India-Japan to Trade in Rupee-Yen Bypassing US Dollar – Modi-Takaichi Summit to Finalise Local Currency Deal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin