
ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு வைரலாகி வருகின்றது.
ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டுள்ளார்.
பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது பதிவு வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

