• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கும்பமேளா செல்ல மோதல்.. ரயில் ஏசி பெட்டி கண்ணாடியை உடைத்த பயணிகள்

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கும்பமேளா செல்ல மோதல்.. ரயில் ஏசி பெட்டி கண்ணாடியை உடைத்த பயணிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 11, 2025 3:10 PM IST

மகா கும்பமேளாவுக்குச் செல்ல ரயிலில் இடம் கிடைக்காததால் பயணிகள் சிலர் ஏசி ரயில் பெட்டிக் கண்ணாடியை உடைத்தனர்.

News18News18
News18

உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் படையெடுப்பதால், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இருக்கைகளில் இடம் கிடைக்காத பயணிகள் பலர், ஆத்திரத்தில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் சீட் பிடிக்க, பயணிகள் முண்டியடித்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம்.

அப்போது அனைத்துப் பெட்டிகளும் நிரம்பிவிட்டால் அடுத்த ரயிலில் செல்லலாம் என்றுதான் அனைவரும் நினைப்பர். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர் மாற்றி யோசித்துள்ளனர். வாரணாசியில் இருந்து சென்ற ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், ரயில் என்ஜினில் ஓட்டுநரின் பகுதியில் ஏறி கதவை பூட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களை ரயில் என்ஜினில் இருந்து அப்புறப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, பிகாரில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக புது டெல்லி செல்லும் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் எல்லை மீறி, கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் குளிர்சாதன வசதி கொண்ட ரயிலில் முன்பதிவு செய்து கும்பமேளா சென்ற பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பல பெட்டிகளிலும் ரயில் கண்ணாடி சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பதிவில்லா பெட்டிகளில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இடம் கிடைத்த பலர் படிக்கட்டு அருகே நின்று பயணத்தை தொடர்ந்தனர். அப்போது கீழே விழாமல் இருக்க, துணியால் இருபுறமும் கட்டி இருந்தனர். கூட்டம் நிரம்பியதால் ரயில் பெட்டியின் கதவுகளை அடைக்கப்பட்டபோது, பலர் உள்ளே இருந்தவர்களின் மீது தண்ணீரை ஊற்றினர்.

#JUSTIN பிகாரில் இருந்து கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜுக்கு செல்ல ரயிலில் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் ஏற முயன்றதால் பரபரப்பு#MahaKumbhMela #Bihar #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/VzwXKdvalH


— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 11, 2025

ரயில்களில் இடம் கிடைக்காத பலர் அசாம்பாவித செயல்களில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகி இருந்தன. மகாகும்பமேளா விழாவின்போது புனித நீராட பக்தர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு படையெடுத்து வருகின்றனர்.

பிரயாக்ராஜுக்குச் செல்லும் சாலைகளில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் ஸ்தம்பித்தனர். முறையான முன்னேற்பாடுகள் செய்யாததே இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

First Published :

February 11, 2025 3:10 PM IST

Read More

Previous Post

டாக்சி கிடைக்காமல் தன்னைத் தானே டெலிவரி செய்துகொண்ட இளைஞர்!

Next Post

சொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் மத்திய அரசு… பதிவு செய்வது எப்படி?

Next Post
சொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் மத்திய அரசு… பதிவு செய்வது எப்படி?

சொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் மத்திய அரசு... பதிவு செய்வது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin