இந்த போட்டி தொடங்கும் முன் ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 2 வெற்றி மூன்று தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் முதல் இடத்தில் இருந்தது. மூன்று, நான்கு, ஐந்து இடங்களில் இருக்கும் ஆர்சிபி, யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் 5 போட்டிகளில் 2 வெற்றியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனவே ஆர்சிபி மகளிருக்கு இது முக்கியமான போட்டியாக அமைந்தது. இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கியது.

