Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போதும் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் 2 நாட்கள் மழை பெய்ததால், இந்திய அணி மட்டுமே பேட்டிங் ஆடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படிக்கல் மற்றும் கேஎல் ராகுலின் அபார ஆட்டத்தால் 462 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி சோனல் தினுஷாவின் சதம் காரணமாக 284 ரன்களை சேர்த்தது.

இதனால் 4வது நாள் ஆட்டத்தை இந்திய அணி 178 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. இலங்கை அணியின் அஷிதா ஃபெர்னாண்டோ வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றினார். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் விரைவாக 200 ரன்களை எடுத்துவிட்டு இலங்கை அணியை பேட்டிங் ஆட வைக்க செய்வதே திட்டமாக உள்ளது.
அப்படி செய்தால் மட்டுமே இந்திய அணியால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். இதனால் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் அவரோ கொஞ்சமும் பொறுப்பின்றி டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸிலும் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி இருந்தார்.
இதனால் ஜெய்ஸ்வாலின் வீக்னஸை எதிரணிகள் கண்டறிந்துவிட்டனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. புதிய பந்தில் கொஞ்சம் ஸ்விங் எப்போதும் இருக்கும். அந்த ஸ்விங் குறைந்த பின் ஜெய்ஸ்வால் எளிதாக ரன்களை குவிக்க முடியும். ஆனால் முதல் ஓவரிலேயே அட்டாக் செய்ய முயன்று ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.
இதனால் ஓய்வறையில் இருந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் டென்ஷனாகினர். இந்திய அணியின் துணைக் கேப்டனுக்கான ரேஸில் ஜெய்ஸ்வால் முன் நிற்கும் சூழலில், அவரின் ஃபார்ம் பிரச்சனையாக மாறி வருகிறது. இதனால் ஜெய்ஸ்வால் அடுத்த டெஸ்டிலேயே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.



