ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ படம் தற்போது வெளியாகி உள்ளது.
சொந்த பையனையே கொல்ல வேண்டியதா போச்சேங்குற குற்ற உணர்ச்சி அவரை தொடர்ந்து துரத்திக்கிட்டே இருக்கு. தான் தான் பையனை கொன்னோம்னு பொண்டாட்டி, மருமகள், பேரனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்கிற பயம் அவருக்குள்ள இருக்கு. இந்த குற்ற உணர்ச்சியில இருந்து அவர் தப்பிக்க நினைக்கிறது தான் ஜெயிலர் 2 படத்தோட முக்கிய கதைக்களம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஸ்கிரீன்ல எப்படி காட்டணும்னு நெல்சன் திலீப்குமாருக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதை நாம முதல் பாகத்துலயே பார்த்தோம். ஜெயிலர் முதல் பாகம் எங்க முடிஞ்சதோ, அங்க இருந்து ரெண்டாம் பாகம் தீயா ஆரம்பிக்குது.
ரஜினி ரசிகர்களுக்காகவே இந்த படத்தை முழுசா எடுத்திருக்காங்க. இந்திய சினிமாவோட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்துல கேமியோ ரோல்ல வந்திருக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்.
அனிருத் ரவிச்சந்தரோட மியூசிக் தான் படத்தோட மிகப்பெரிய பிளஸ். ஒவ்வொரு சீன்லயும் அனிருத்தோட பிஜிஎம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போகுது. படத்தோட மூடை அப்படியே மெயின்டெயின் பண்றது அனிருத் தான். படம் மொத்தமா ஆடியன்ஸை சீட் நுனியில உட்கார வைக்குது.
எமோஷனல் சீன்ஸ்ல இந்த வயசுலயும் ரஜினியோட நடிப்பு ஆச்சரியப்பட வைக்குது. முத்துவேல் பாண்டியன் கேரக்டரா ரஜினி ரொம்ப இயல்பா மாறியிருக்காரு.
நடிகர்களோட சிறப்பான நடிப்பு படத்துக்கு பெரிய பலம். ஸ்கிரீன் பிரசன்ஸ்ல ரஜினி மிரட்டியிருக்காரு. ‘போதி கல்பக்’ கேரக்டர்ல எஸ்.ஜே. சூர்யா பின்னி பெடலெடுத்துட்டாரு.
வித்யா பாலன் நடிச்ச ‘காந்தா கல்பக்’ கேரக்டர், சமீப காலத்துல நாம பார்த்த ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி வில்லன் கேரக்டர்னு சொல்லலாம். 3-ம் பாகத்துக்கான லீடோட படத்தை முடிச்சிருக்காங்க. ஜெயிலர் 3-ல நெல்சன் என்னென்ன சர்ப்ரைஸ் வெச்சிருக்காருனு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
இந்த நிலையில ஜெயிலர் 2 படத்தோட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகிருக்கு. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள்ல உலகளவில் ரூ.125 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதா சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்குது.
இதில் இந்தியாவுல மட்டும் ரூ.70.25 கோடியும், ஓவர்சீஸில் ரூ.55 கோடியும் வசூல் செஞ்சிருக்கு. அதிலும் அதிக பட்சமா தமிழ் வெர்சன் ரூ.43.35 கோடியும், தெலுங்குல ரூ.12.50 கோடியும், இந்தில ரூ.3.50 கோடியும் வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் 2026-ம் ஆண்டுல முதல் நாளில் அதிக வசூல் செஞ்ச தமிழ் படம் என்கிற சாதனைய ஜெயிலர் 2 படைச்சிருக்கு. R

