Last Updated:
டெல்லியில் மூவண்ணக் கொடி பேரணியில் தடையை மீறி கலந்து கொள்ள ஆயத்தமான, சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே குண்டுக்கட்டாக தடுப்புக் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார்.
டெல்லியில், காவல்துறையினரின் தடையையும் மீறி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் மூவண்ணக் கொடி பேரணி நடைபெற்றது. அபிஜீத் திப்கே தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இளைஞர்களின் போராட்டத்தால் தலைநகர் குலுங்கியது.
டெல்லியில் மூவண்ணக் கொடி பேரணியில் தடையை மீறி கலந்து கொள்ள ஆயத்தமான, சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே குண்டுக்கட்டாக தடுப்புக் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் எனவே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகவேண்டும் எனவும் வலியுறுத்தி சிஜேபி எனப்படும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் நேற்று மாலை 5 மணிக்கு மூவண்ணக் கொடி பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார். அண்மையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
VIDEO | Delhi: Police detain CJP founder Abhijeet Dipke as he leaves for the Tiranga march.
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) https://t.co/RuekstKTum— Press Trust of India (@PTI_News) October 16, 2026
ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி அபிஜித் தீப்கே மாலை 5 மணியளவில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தேசியக்கொடியுடன் வெளியே வந்தபோது முன்னெச்சரிக்கையாக தடுப்புக் காவலில் அவரை அழைத்துச் சென்றனர். அபிஜித் தீப்கே குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. எனினும் காவல்துறையினரின் தடையையும் மீறி பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் மூவண்ணக் கொடிகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
#WATCH | People carry out the ‘Lehra Do Tiranga’ protest march in the national capital, following a call by the CJP for the demonstration today.
CJP Founder Abhijeet Dipke has been detained by Delhi Police https://t.co/M0cBpeza2P— ANI (@ANI) October 16, 2026
அதேபோல தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத் தலைவரான நேஹா போராவும், டெல்லி காவல்துறையால் தடுப்புக் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார். அதனை கண்டித்து ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மூவண்ணக் கொடி பேரணியில் பங்கேற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
VIDEO | Delhi: AISA chief Neha Bora detained by Delhi Police at Mandi House during Tiranga protest.
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) https://t.co/4Ec83tnxma— Press Trust of India (@PTI_News) October 16, 2026
இதனிடையே அபிஜீத் தீப்கே மற்றும் நேஹா போரா எங்கே இருக்கிறார்கள் என்று தெரிவிக்காமல் காவலில் வைத்திருப்பது, சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


