• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“ஜியோவை உருவாக்கியது மக்கள் தான்” – ஜியோ பங்குப் பட்டியல் விழாவில் அனந்த் அம்பானி பேசிய 5 முக்கிய விஷயங்கள்!   | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“ஜியோவை உருவாக்கியது மக்கள் தான்” – ஜியோ பங்குப் பட்டியல் விழாவில் அனந்த் அம்பானி பேசிய 5 முக்கிய விஷயங்கள்!   | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஓவில் பங்குகளைப் பெற்ற முதலீட்டாளர்கள், பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் ஜியோ பங்குகள் மதிப்பு சுமார் 22% உயர்ந்தன.  இந்த தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில் அவர் குறிப்பிட்ட 5 முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

1.ஜியோ இந்திய மக்களுக்கானது: அனந்த் அம்பானி கூறுகையில், “பங்குச்சந்தைக்கான மணி, கோயில் மணி போல ஒலிக்கிறது. என்னை பொறுத்தவரை வியாபாரம் என்பது பூஜையை போல. ஒவ்வொரு பூஜை முடிந்தபிறகும் பிரசாதம் வழங்கப்படும். இந்த பிரசாதம் மற்றவர்களுக்கும் பகிரப்படுவது போல, இன்று ஜியோ இந்தியாவுடன் பகிரப்படுகிறது. இன்றைய தினத்தை தெய்வங்களான விநாயகர், துவாரகாநாத், ஸ்ரீநாத், பாலாஜி மற்றும் வாழும் தெய்வம் பாரத மாதா ஆகியோரின் பாதங்களில் அர்ப்பணம் செய்கிறோம்.

2.இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் கனவுகள்தான்: “இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம் அதன் கனவுகள்தான். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. கைகள் காலியாக இருக்கலாம்; ஆனால் கண்கள் ஒருபோதும் காலியாக இருப்பதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனது தாத்தா திருபாய் அம்பானியின் வாழ்க்கைப் பயணத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். குஜராத் மாநிலம் சோர்வாட் என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்த திருபாய் அம்பானி, பெட்ரோல் பம்பில் பணியாற்றிய பின்னர், தனது கடின உழைப்பால் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார். ஒரு சாதாரண இந்தியராலும் அசாதாரணமான கனவுகளைக் காண முடியும் என்பதைத் திருபாய் அம்பானி நிரூபித்தார்” என  அனந்த் அம்பானி தெரிவித்தார்.

3.ஜியோ இந்தியர்களின் டிஜிட்டல் கனவுகளுடன் இணைந்துள்ளது: மக்களை இணைப்பதில் ஜியோவின் பங்கு குறித்து அனந்த் அம்பானி பேசினார். பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது மாணவர்கள் இணையம் மூலம் கல்வியைத் தொடரவும், வீடியோ அழைப்புகள் மூலம் குடும்பத்தினர் தொடர்பில் இருக்கவும், வீட்டிலிருந்தே ஆன்மிகத் தலங்களின் தரிசனத்தைப் பெறவும் இணைய இணைப்பு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மொபைல் போன்கள் மூலம் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் பேசுவது, ராஜஸ்தானின் பாலி பகுதியில் உள்ள தீவிர நோயாளிக்கு மும்பை மருத்துவர் சிகிச்சை அளிப்பது போன்ற நிகழ்வுகளையும் அவர் எடுத்துரைத்தார். இத்தகைய அனுபவங்களை இணைக்கும் பாலமாக ஜியோ இருப்பதாகக் கூறினார்.

4.ஜியோவை உருவாக்கியது மக்கள் தான்:  ஜியோவை நம்பும் 53 கோடி வாடிக்கையாளர்களுக்கும் அனந்த் அம்பானி நன்றி தெரிவித்தார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே முக்கியக் காரணம் என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே நிறுவனத்தின் இலக்கு என்றும் அவர் கூறினார்.  ஜியோவின் களப்பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனைப் பங்குதாரர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

5.3 உடல்கள்.. ஒரே ஆன்மா:  தனது சகோதரி இஷா அம்பானி, சகோதரர் ஆகாஷ் அம்பானி ஆகியோருடன் இணைந்து, குடும்பத்தின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருப்பதாக அனந்த் அம்பானி தெரிவித்தார்.

திருபாய் அம்பானியின் கனவுகள், பாட்டியின் ஆசீர்வாதம், தந்தையின் வழிகாட்டுதல் மற்றும் தாயின் பணிவு, அக்கறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரிலையன்ஸ் தொடர்ந்து புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஜியோ தொடர்ந்து பங்களிக்கும் என்றும் உறுதியளித்தார்.

Read More

Previous Post

போதைப்பொருட்களுடன் இந்திய பொறியியலாளர் கைது

Next Post

DECODE | இஸ்ரேல் தேர்தலில் மெகா ட்விஸ்ட்… நெதன்யாகு ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி?

Next Post
DECODE | இஸ்ரேல் தேர்தலில் மெகா ட்விஸ்ட்… நெதன்யாகு ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி?

DECODE | இஸ்ரேல் தேர்தலில் மெகா ட்விஸ்ட்... நெதன்யாகு ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin