• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்: வேணு சீனிவாசன் மனைவி மற்றும் மகள் கூட்டறிக்கை..!! | TVS Succession Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Economic Settlement Reached in Venu Srinivasan Family

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்: வேணு சீனிவாசன் மனைவி மற்றும் மகள் கூட்டறிக்கை..!! | TVS Succession Dispute: Mallika Srinivasan and Lakshmi Venu Say No Economic Settlement Reached in Venu Srinivasan Family
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதில் குடும்பத்திற்குள் சொத்து பங்கீடு குறித்து எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் அனைத்து சொத்துகளும் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டுமே சொந்தம் என்றும், அவரே அவற்றை தன்னிச்சையாக பிரிக்கவோ அல்லது விநியோகிக்கவோ முழு உரிமை உடையவர் என்ற நிலைப்பாட்டை தாங்கள் எந்த வகையிலும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால் சொத்து பிரச்சினை தீராமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டிவிஎஸ் குழுமத்தில் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றுக்கு எல்லாம் தலைவராக இருப்பவர் வேணு சீனிவாசன். கடந்த 2020-ஆம் ஆண்டில் டிவிஎஸ் குழுமம், அதன் நிறுவனர் டி.வி. சுந்தரம் ஐயங்காரின் பல்வேறு வாரிசுகளுக்கு இடையே சுமுகமாக சொத்து மற்றும் நிர்வாக பிரிவு செய்யப்பட்டது. நிறுவனங்களின் சொத்துகள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு, பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

அந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே வேணு சீனிவாசன் குடும்பம் டிவிஎஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டை பெற்றது. வேணு சீனிவாசன் தற்போது டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் (Chairman Emeritus) பொறுப்பில் இருக்கிறார். இவர் மகன் மற்றும் மகளுக்கு நிர்வாகத்தை சமமாக பிரிக்காமல் இருப்பது சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

அண்மையில் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில், வேணு சீனிவாசனின் மகனும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எம்டியுமான சுதர்சன் வேணு, டிரஸ்ட் கட்டமைப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க பயனடைபவர் (Significant Beneficial Owner – SBO) என பெயரிடப்பட்டார். இதன் பின்னர்தான் குடும்பத்திற்குள் சொத்துரிமை தொடர்பான மோதல்கள் ஏற்பட்டன.

ஏற்கனவே சுதர்சன் மற்றும் லட்சுமி வேணுக்கு நிர்வாக பிரிப்பு தொடர்பாக ஒரு முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் படி, சுதர்சன் வேணுவிடம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும், லட்சுமி வேணுவிடம் Die-casting நிறுவனமான சுந்தரம்-கிளேட்டன் (Sundaram-Clayton) நிறுவனமும் ஒப்படைக்கப்பட்டது. சுதர்சன் வேணுவின் கட்டுப்பாட்டில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மிக 1.83 லட்சம் கோடி ரூபாய். இதுவே லட்சுமி வேணு நிர்வாகம் செய்யும் சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2,432 கோடி ரூபாய் தான். மேலும் இந்நிறுவன பொறுப்பு லட்சுமி வேணுவிடம் வழங்கப்பட்டாலும் அவருக்கு அதில் அதிகாரம் வழங்காமல் வேணு சீனிவாசனே முடிவுகளை எடுத்ததால் லட்சுமி வேணு கோபமடைந்துள்ளார்.

குடும்ப சொத்துகளின் பங்கீட்டில் மகனுக்கும் மகளுக்கும் சம பங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என மல்லிகா சீனிவாசனும் மகள் லட்சுமி வேணுவும் வலியுறுத்துகின்றனர். எந்தவொரு சமரசமும் முறையான மதிப்பீடு, வெளிப்படையான ஆலோசனை மற்றும் அனைத்து உறுப்பினர்களின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என இருவரும் கூறுகின்றனர். 2020-இல் ஒட்டுமொத்த டிவிஎஸ் குடும்பத்தினரிடையே பின்பற்றப்பட்ட முறையான சொத்து பகிர்வை பின்பற்றி நம் குடும்பத்திலும் சொத்தினை பிரிக்க வேண்டும் என லட்சுமி வேணு தரப்பு கோருகிறது.

நியாயமான பொருளாதார அங்கீகாரத்தை தான் நாங்கள் கேட்கிறோம் என கூறியுள்ள லட்சுமி வேணு, நிர்வாக பிரிப்பும் சொத்து பிரிப்பும் ஒன்று கிடையாது என்கிறார். பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சினையை தீர்க்கவே நாங்கள் விரும்புகிறோம் என லட்சுமி சீனிவாசனும், மல்லிகா வேணுவும் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Read More

Previous Post

இன்று இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 4வது டி-20 போட்டி… பிளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை – பற்ற வைத்த உதய கம்மன்பில

Next Post
ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை – பற்ற வைத்த உதய கம்மன்பில

ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin