Last Updated:
மாறிவரும் ட்ரெண்ட்களுக்கு ஏற்ப நிர்மா செயல்படத் தவறிவிட்டது. போட்டியாளர்கள் தங்கள் தயாரிப்புகளையும், சந்தைப்படுத்தல் உத்திகளையும் மேம்படுத்திக் கொண்டாலும், நிர்மா எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் அப்படியே இருந்தது.
“வாஷிங் பவுடர் நிர்மா” என்ற இந்த ட்யூன் 1990களில் பிரபலமானது. இந்த பாடல் நினைவுக்கு வந்ததும், ஒரு வெள்ளை நிற ஃபிராக்கை அணிந்த ஒரு சிறிய பெண் சுற்றுவது நம் கண்முன்னே வரும். இந்த நிர்மா டிடெர்ஜென்ட் பவுடர் ஆனது, அதன் மலிவு விலை மற்றும் துணிகளை சுத்தம் செய்யும் திறனுக்கு பெயர் பெற்றது. இருப்பினும், இன்றைய காலக்கட்டத்தில், இந்த பிராண்ட் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டது, ஏனெனில் ஏரியல், டைட் மற்றும் சர்ஃப் எக்செல் போன்ற பல பிராண்ட்களால் அது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கர்சன்பாய் படேல் 1944 ஏப்ரல் 13 அன்று விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கர்சன்பாய் படேல் படிப்பிற்காக அவரது தந்தை கடுமையாக உழைத்தார். கர்சன்பாய் படேல் படித்து முடித்துவிட்ட பிறகு, அவருக்கு அரசு வேலை கிடைத்தது, பின்னர் திருமணமாகியதை அடுத்து, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு நிருபமா என்று பெயர் வைத்துள்ளார். கர்சன்பாய் தனது மகளை மிகவும் நேசித்தார். இதன் காரணமாக அவளை நிர்மா என்று அன்புடன் அழைத்தார், ஆனால் அப்பா மகளுக்கு இடையே இருந்த காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை, நிர்மா விபத்தில் இறந்தார்.
அவரது அன்பு மகள் இறந்த பிறகு, கர்சன்பாய் சோர்வடைந்தார். தன் மகள் நிர்மா படிக்க வேண்டும், அவள் பெயர் உலகம் முழுவதும் அறியப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், ஆனால் அவர் இளம் வயதிலேயே இறந்ததால், அவரது கனவு நிறைவேறாமல் போனது. இருப்பினும் அவரது மகளின் பெயர் இந்தியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணி, மகளின் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்க நினைத்தார். இதனையடுத்து நிர்மாவின் பயணம் 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கர்சன்பாய் படேல் தனது வீட்டு முற்றத்தில் பல்வேறு இரசாயனங்களைக் கலந்து சோப்புப் பொடியைத் தயாரிக்கத் தொடங்கினார். அவர் தயாரித்த வாஷிங் பவுடரின் பெயர் “நிர்மா”, இந்த பெயரானது விபத்தில் இறந்த அவரது மகள் நிருபமாவின் பெயரிலிருந்து இந்த பெயர் பெறப்பட்டது. பின்னர் அதை தனது சைக்கிளில் வீடு வீடாக விற்பனை செய்ய முயன்றார். நிர்மா வாஷிங் பவுடர் மிக மலிவு விலையில் சிறந்த க்ளீனிங்கை வழங்குவதால் விரைவில் மிகவும் பிரபலமாகிவிட்டது.அப்போது பிரபலமான டிடெர்ஜென்ட் சர்ப் ஆனது கிலோ ரூ.15க்கு விற்கப்பட்டது, ஆனால் நிர்மா டிடர்ஜென்ட் சர்ப் வெறும் ரூ.3.50க்கு கிடைத்தது. இந்த இரண்டுக்கும் இடையே இருந்த விலை வித்தியாசம்தான் நிர்மானை மிகப்பெரிய வெற்றிக்கு கொண்டு சென்றது.
1990களில், நிர்மா நிறுவனம் இந்திய சந்தையில் 60% பங்கை வைத்திருந்தது. அதன் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் போட்டி விலை நிர்ணயம் ஆகியவற்றின் காரணமாக பெரிய பிராண்டுகளை விஞ்சியது. இதன் பிறகு, பி&ஜி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் போன்ற சர்வதேச நிறுவனங்கள் சந்தையில் நுழைந்தன. அவர்கள் சுப்பீரியர் கிளீனிங் ஏஜென்ட் கொண்ட மேம்படுத்தப்பட்ட டிடெர்ஜென்ட்களை அறிமுகப்படுத்தியதால் நவீன வடிக்கையாளர்களால் ஈர்க்கப்பட்டனர்.
மாறிவரும் ட்ரெண்ட்களுக்கு ஏற்ப நிர்மா செயல்படத் தவறிவிட்டது. போட்டியாளர்கள் தங்கள் தயாரிப்புகளையும், சந்தைப்படுத்தல் உத்திகளையும் மேம்படுத்திக் கொண்டாலும், நிர்மா எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் அப்படியே இருந்தது. இதன் காரணமாக போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களான இல்லத்தரசிகளிடமிருந்து கவனத்தை திசை திருப்ப, விளம்பரங்களில் ரித்திக் ரோஷனைக் காட்ட முடிவு செய்தது.
இதற்கிடையில், சர்ஃப் எக்செல்லின் விளம்பரமானது, நிர்மாவை மேலும் ஓரங்கட்டியது. இந்நிலையில் 2010களில், நிர்மாவின் சந்தைப் பங்கு வெறும் 6% ஆகக் குறைந்தது. சோப்புகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களாக விரிவடைய முயற்சித்த போதிலும், நிர்மாவானது அதன் கடந்த காலப் பெருமையை மீண்டும் பெறவில்லை.
March 30, 2025 7:22 AM IST
சைக்கிளில் வாஷிங் பவுடர் விற்று, பில்லியன் டாலர் நிறுவனத்தை கட்டி எழுப்பியவர்.. யார் தெரியுமா?


