செல்வமகள் சேமிப்பு (SSY) திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ.3,000 முதலீடு செய்தால், தற்போதைய 8.2 சதவீத ஆண்டு வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் பட்சத்தில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.17,23,709-ஐ பெறலாம். இச்சூழ்நிலையில், உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.5,40,000 ஆகவும், உங்களுக்குக் கிடைக்கும் வட்டித் தொகை சுமார் ரூ.11,83,709 ஆகவும் இருக்கும். அதாவது மாதாந்திர முதலீடு: ரூ.3,000, 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.5,40,000, மதிப்பிடப்பட்ட வட்டி: ரூ.11,83,709, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகை: ரூ.17,23,709 ஆகும். இருப்பினும், இந்தக் கணக்கீடு தற்போதைய 8.2 சதவீத ஆண்டு வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தை அரசு ஒவ்வொரு காலாண்டிலும் மறுஆய்வு செய்யலாம். இதன் விளைவாக, உண்மையான முதிர்வுத் தொகை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

