Last Updated:
தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் செல்லப்பிராணிகளுக்கு ராஜ மரியாதை அளிப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாய்க்குட்டிகளுக்கான வைர நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
அங்குள்ள பரக்கேரட் ஓட்டல் மற்றும் தி டி டைமெண்ட் நியூயார்க் நிறுவனங்கள் இணைந்து இந்த விற்பனையைத் தொடங்கி உள்ளன. தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் செல்லப்பிராணிகளுக்கு ராஜ மரியாதை அளிப்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விதவிதமான டிசைன்களில் வைர காலர், பெண்டெண்ட் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை 7 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் இருந்து கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை நாய்கள் காப்பகத்திற்குத் தர உள்ளதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

